Vijay Tv-க்கு போனாலே சீக்கிரம் கோடீஸ்வரன் ஆகிடலாம் போலிருக்கு. ஒரு ஷோவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறாங்க. அது தவிர ஏகப்பட்ட சலுகைகள் இருக்கு. கேட்கும் போதெல்லாம் லீவு கொடுக்கிறாங்க. வேலை செய்யும் போதே இடையில் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதற்கும் பர்மிஷன் கொடுக்கிறாங்க.
சேனலில் வேலை பார்ப்பவர்கள் படத்தில் நடித்து ஹிட்டாகிவிட்டால் இவங்களே புரோமோஷனும் பண்ணித்தராங்க. ஆகமொத்தம் விஜய் டீவிக்கு உள்ளே நுழைந்தாலே லைப் செட்டிலான மாதிரி தான். வருமான வாய்ப்பு இதோடு நின்றுவிடுவதில்லை. அங்கு வேலை பார்க்கும் தொகுப்பாளர்கள் ஆளுக்கு ஒரு Youtube சேனல் வெச்சிருக்காங்க. இவங்க ஏற்கனவே பிரபலம் என்பதால், வீடியோ வியூஸ் லட்சக்கணக்கில் போகும். அதிலும் வருமானம் குவிகிறது. பணம் காய்க்கும் மரம் மாதிரி ஆகிருச்சு விஜய் டீவி.
இடையில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் மூலம் விஜய் டீவிக்குள் நுழைந்தார். பிறகு சினிமா வாய்ப்புகள் எல்லாம் வந்துகுவிய ஆரம்பித்தது. தன்னோடு சேர்ந்து மகளையும் படத்தில் நடிக்க வைத்தார். தனியா Youtube சேனலும் நடத்துறாங்க. அம்மா, மகள் போடும் வீடியோ கோடிக்கணக்கில் வியூஸ் போவதால், லட்சக்கணக்கில் வருமானம் குவிகிறது.
கொஞ்ச நாளுக்குள் பலகோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாக சொல்றாங்க. சினிமா வாய்ப்புகள் எல்லாம் வருவதால், இப்போ ஆங்கரிங் பண்றதில் ஆர்வம் காட்டுவது இல்லை போலிருக்கு. கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருக்கு. மீண்டும் ஜீ டீவிக்கே போக அரச்சனா முடிவெடுத்து இருக்காங்க. சூப்பர் மாம்(Super Mom) நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.