notification 20
Lushgreen
ஜெயம் ரவியை விக்ரம், கார்த்தி முன்னிலையிலே கடுமையாக திட்டிய இயக்குனர்! நீயெல்லாம் நடிகனே கிடையாது! அச்சோ! இப்படியுமா திட்டுவது?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் தான் விடுதலை. இந்த படத்தில் என்ன நடந்ததோ யாரு கண்ணு பட்டதோ? வெற்றிமாறனுக்கும் விஜய் சேதுபதிக்கும் முட்டி கொண்டதாம். இருவரும் ஒருவருக்கொருவர் கோவித்து கொண்டார்களாம். என்ன நடந்தது என விசாரித்தால், வெற்றிமாறன் ஒரு சீன் கொடுக்க விஜய் சேதுபதி அந்த சீனை தன் பாணியில் செய்துள்ளார். இது வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லையாம். வெற்றிமாறனோ, 'சார் நான் சொல்வது போல செய்யுங்கள்' என கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் என்றாலே குறைந்தபட்சம் அங்கு 75 பேராவது இருப்பார்கள் இல்லையா? இத்தனை பேருக்கு முன்னாடி வெற்றிமாறன் இப்படி சொல்லிவிட்டாரே என கோவித்து கொண்டாராம் விஜய் சேதுபதி.

முன்னதாக நேருக்கு நேர் படத்தில் அப்படத்தின் இயக்குனர், சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலே எல்லோர் முன்னிலையிலும் கடுமையாக திட்டுவாராம். அதன் விளைவு தான் அந்த இயக்குனரை இதுவரை தன்னுடன் சேர்த்து கொள்ளவில்லையாம் சூர்யா. அதாவது அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றவில்லை. 

இவர்களாவது பரவாயில்லை மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாகிவருவது எல்லோருக்கும் தெரியும். பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் மணிரத்தினம் படத்தில் நடிப்பதை ஏதோ வரம் போல நினைத்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயம் ரவியை கடுமையாக திட்டியுள்ளார் மணிரத்னம். 'நீயெல்லாம் நடிகனே கிடையாது. நீ வந்த முதல் நாளிலே தெரிந்துவிட்டது. வேறு வழியே இல்லாமல் வைத்துள்ளேன்' என கடுமையாக பேசியுள்ளார். அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோர் முன்னிலையிலும் குறிப்பாக விக்ரம், கார்த்தி எல்லாம் அந்த ஸ்பாட்டில் இருந்தார்களாம். 

எதற்காக இப்படி கத்தியுள்ளார் என பார்த்தால், இந்த படம் முடியும்வரை விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவியை நீளமாக முடிவளர்க்க சொல்லியுள்ளார்கள். இப்படி இருக்க திடீரென ஜெயம் ரவி மட்டும் திடீரென முடியை வெட்டிவிட்டு வந்தாராம். இதனால் தான் இயக்குனர் கடுப்பாகியுள்ளார். சரித்திர கதையில் நடித்துக்கொண்டிருக்கும் போது, இதெல்லாம் முக்கியம் தானே? ஜெயம் ரவி ஏன் இப்படி செய்தார் என கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.  

Share This Story

Written by

AP View All Posts