ஐபில் தொடரின் முதலாவது செமி பைனல் ஆட்டம் நேற்று நடந்தது. சென்னை அணி டெல்லி அணியை சந்தித்தது. இந்த தொடரில் இதுவரை சென்னை அணி டெல்லியுடன் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. எப்படியும் சென்னை நேத்து நடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்துவிடும் என எல்லோரும் நினைத்தார்கள்.
அவங்க நெனச்ச மாதிரியே ஆரம்பம் முதலே டெல்லி அணியின் கை ஓங்கி இருந்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகம் குறையவே இல்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 173 ரன்களை எடுத்தது. துபாய் மைதானத்தில் 174 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சென்னையும் இதுவரை ஒரு முறை கூட டெல்லியிடம் இந்த தொடரில் வெற்றி பெறாத காரணத்தால் எல்லோரும் டெல்லி தான் ஜெயிக்கும் என்று நினைத்திருப்பார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்த உடன் டுப்லெஸிஸ் முதல் ஒவரிலே அவுட் ஆகி ரசிகர்களை அ*திர்ச்சி ஆக்கினார். பின்னர் ஜோடி சேர்ந்த கைக்கவாட் மற்றும் உத்தப்பா இருவரும் பொறுமையுடன் அணியின் ரன்களை உயர்த்தினார்கள். ஒரு கட்டத்தில் 12 பந்துகளை 25 ரன்கள் தேவைப்படும்போது ஜடேஜா உள்ளே வருவார் என்று நினைத்த போது தல டோனி உள்ளே வந்தார். மேட்ச் பாத்த எல்லோரும் ஜடேஜா வந்திருந்தா சென்னை ஜெயிச்சுருக்கும், இவரே பார்மில் இல்லாமல் இருக்கார், இவர் ஏன் இப்போ உள்ள வர்ராரு என்று தோனியை திட்ட ஆரம்பித்தனர்.
எல்லோரும் நெனச்சப்போ தோனி அடிக்கவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரி அடித்து சென்னை அணியை பைனலுக்கு அழைத்து சென்றார். ஒரு வேலை தோனி இறங்கிய இடத்தில் ஜடேஜா வந்திருந்தால் சென்னை ஜெயிச்சிருக்குமா என்பது சந்தேகம் தான். எனக்கு வயசு மட்டும் தான் ஆயிருக்கு, நான் எப்பவும் போல பழைய டோனி தான், என்னுடைய ஆட்டம் இன்னும் மாறவில்லை என்று தன்னுடைய விளையாட்டால் இவரை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
போட்டி நடைபெறுவதற்கு முன்னரே டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சென்னை அணி பற்றி பேட்டி கொடுத்திருந்தார். நீங்க சென்னை அணியில் யாரை வேண்டுமானாலும் சாதாரணமா அசால்ட்டா நெனச்சுக்கோங்க. ஆனால் இந்த டோனியை மட்டும் எப்பவும் சாதாரணமா எடை போட்டுராதீங்க. நமக்கு இருக்க ஒரே பிளஸ் அவருடைய மட்டையில் பந்து சரியா படமாட்டேங்குது. மத்தபடி அவருடைய மூளையை வைத்து அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். நம்ம மொத்த அணியின் பலம் டோனி ஒருவரின் பலத்திற்கு சமம்.
சென்னை அணி லீக் போட்டியில் ஒரு மாதிரி விளையாடுவாங்க, பிலேஆஃப் போட்டியில் வேற மாதிரி விளையாடுவாங்க. டோனி என்கிற ஒரு ஆள் இருக்க வரைக்கும் அவங்கள நம்மளால் ஒன்னும் பண்ண முடியாது. அவர்கிட்ட ரொம்ப ஜா*க்கிரதையாக இருங்க என்று பேட்டி கொடுத்திருந்தார். அவர் சொன்னதை போலவே நேற்றைய போட்டியில் டோனி ருத்ரதாண்டவம் ஆகிவிட்டார். வயசாகிருச்சு, பந்து பேட்ல படமாட்டேங்குது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போ தலையை தொங்க போட்டுக்கிட்டு சுத்துறாங்க.