Daily News

ரத்தன் டாட்டாவுக்கு தலைவர் பதவி! பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு! அடுத்து நடக்கப்போவது இது தான்!

Sep 21 2022 11:13:00 AM

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை. அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு நிதி வழங்கி கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

PM cares leader narendira modi ratan tata

வென்டிலேட்டர்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவது, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவது ஆகியவற்றுக்காக பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்பட்டது. இந்த அறக்கட்டளையில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் மேலும் சில நிர்வாகிகளை நியமித்துள்ளார் பிரதமர் மோடி.

PM cares leader narendira modi ratan tata

நம் நாட்டில் இருக்கும் தொழிலதிபர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். இவரை பி.எம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு தலைவராக நியமித்துள்ளனர். ரத்தன் டாடா மட்டுமின்றி மேலும் இரண்டு பேர் பி.எம் கேர்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் ஆவார். மற்றொருவர் முன்னாள் துணை சபாநாயகரான கரிய முண்டா. இது தவிர இந்த அறக்கட்டளைக்கு ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.