Shoreline

தண்ணீரை இந்தக் கலருல நீங்க எங்கேயாவது பார்த்ததுண்டா? நீரின் இந்த நிற மாற்றத்துக்கு என்ன காரணம்?

Sep 11 2021 11:36:00 AM

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நண்பன் ஒருவன் ஒரு வித்தியாசமான ஏரிக்கு அருகே சில புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருந்தான். அதைப்பார்த்துவிட்டு என்னடா போட்டோஷாப் எடிட் பண்ணி வெளியிட்ட மாதிரி இருக்கே என்று கேட்டேன். அந்த பயபுள்ள இதனால் டென்ஷன் ஆயிட்டான். டேய் மடையா இது ஒரிஜினல் புகைப்படம். நல்ல பாருடா என்று சொன்னான். எப்படிடா தண்ணீர் இந்தக்கலருல இருக்கு என்று அவனிடம் கேட்டேன். அந்த ஏரியை பற்றி ஒன்றரை மணி நேரம் மொக்கை போட்டான். ஆனா அதுல சில சுவாரசியமான விஷயங்களும் இருக்குதுங்க. அதை உங்ககிட்ட சொல்றேன் கேளுங்க.

pink-lake wonder-in-australia

நீருக்கு நிறம் உள்ளதா என்று கேட்டால் நம்மாளுங்க பலரும் குழம்பிப்போவாங்க. இந்த கேள்விக்கே குழப்பம் அடைந்தால் ஹிலியர் ஏரியை கண்டால் எல்லாருக்கும் மனதில் என்ன தோன்றும் என்றே தெரியவில்லை. ஹிலியர் ஏரி என்பது ஒரு உப்பு ஏரியாகும். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட்ஃபீல்ட்ஸ்-எஸ்பெரன்ஸ் பகுதியில் உள்ள ரெச்செர்ச் தீவுக்கூட்டத்தை உருவாக்குகிறது. ஒரு நீண்ட மற்றும் மெல்லிய கரையானது தெற்குப் பெருங்கடலை  ஏரியிலிருந்து பிரிக்கிறது.

pink-lake wonder-in-australia

ஹிலியர் ஏரி சுமார் 600 மீட்டர் (2,000 அடி) நீளமும் 250 மீ (820 அடி) அகலமும் கொண்டது. இந்த ஏரி யூகலிப்டஸ் மரங்களால் சூழப்பட்டுள்ளது. மத்திய தீவின் வடக்கு கடற்கரையிலிருந்து அதன் வடக்கு விளிம்பை தாவரங்களால் மூடப்பட்ட குறுகிய மணல் குன்றுகள் பிரிக்கின்றன.

pink-lake wonder-in-australia

இந்த ஏரியில் என்ன சிறப்பம்சம் என்று நீங்க கேட்கவே தேவையில்லை. இதைப்பார்த்தாலே நீங்க அத புரிஞ்சிக்கலாம். எடுத்து அடிக்கிற மாதிரி ஒரு கலருல இந்த ஏரியின் நீர் இருக்கிறது. இந்த நிறம் நிரந்தரமானது. ஒரு குடம் அல்லது பாத்திரத்தில் நீர் எடுத்து சென்றாலும் அந்த நீர் நிறம் மாறாமல் இருப்பதை காணலாம். ஏரியின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு டுனாலியெல்லா சாலினா என்ற உயிரினம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

pink-lake wonder-in-australia

ஹிலியர் ஏரியில் டுனாலியெல்லா சாலினா மற்றும் சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் இருப்பதால் ஏரி இளஞ்சிவப்பு சாயம் பூசப்பட்டதை போல தோன்றுகிறது. பார்ப்பதற்கு அசாதாரணமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த ஏரி மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

pink-lake wonder-in-australia

மேலே இருந்து ஏரி ஒரு திடமான இளஞ்சிவப்பு நிறமாகத் தோன்றுகிறது. 2016 ஆம் ஆண்டில் எக்ஸ்ட்ரீம் மைக்ரோபயோம் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விரிவான நுண்ணுயிரியல் ஆய்வுகளை இந்த ஏரியில் நடத்தி ஹாலோக்வாட்ராட்டம், ஹாலோஃபெராக்ஸ், சாலினிபாக்டர், ஹாலோபாக்டீரியம், ஹாலோஜியோமெட்ரிகம் மற்றும் பல ஹாலோபிலிக் உயிரினங்களைக் கண்டறிந்தனர்.

pink-lake wonder-in-australia

அதிக உப்பு இருந்தபோதிலும் ஹிலியர் ஏரியில் நீராடுவது பாதுகாப்பானதாகவே இருக்கிறது. இருப்பினும், மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் இல்லாமல் நீராடுவது அனுமதிக்கப்படாது.

pink-lake wonder-in-australia

ஹிலியர் ஏரியை அடைய சில வழிகள் உள்ளன. அருகிலுள்ள கேப் லே கிராண்ட் தேசிய பூங்கா வழியாக விமானம் ஹிலியர் ஏரிக்கு மேலே பறக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட ஏரி மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதியைப் பார்வையிட விரும்பும் பயணிகளுக்கு கப்பல்கள் வசதியாக இருக்கும். இப்ப சொல்லுங்க இந்த ஏரியில் குதிச்சி விளையாடனும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? அந்த எண்ணம் ஏற்பட்டால் உடனே ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுங்கள்.