Daily News

Lip-Stick போட்ட பஸ்கள் உங்க ஊருக்கு வந்திருக்கா? எங்க ஊரில் அதுக்கும் மேலே Special அயிட்டம் ஒண்ணு வந்திருக்கு! உள்ள வாங்க பார்ப்போம்!

Aug 08 2022 01:04:00 PM

பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள் அறிமுகப்படுத்தப்போறாங்கன்னு சொன்னதும், ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் நீல நிற பஸ்கள் போல வித்தியாசமான டிசைனில் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளோ வித்தியாசப்படுத்தி காட்டுவாங்கன்னு சத்தியமா நினைக்கல.

Pink Bus Womens Bus Govt Bus

பஸ்களின் முன்புறத்தை போட்டோ எடுத்து போட்டிருந்தாங்க. பார்த்த உடனே, அடடே! அழகா இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டேன். அப்படியே சைடு ஆங்கிளில் எடுக்கப்பட்ட போட்டோவை காட்டினாங்க. என்னடா கண்றாவி இதுன்னு? கேட்கத்தூண்டியது. எனக்கே இப்படி தோன்றியது என்றால், நம்ம 2கே கிட்ஸ்களுக்கு சொல்லவா வேண்டும். 

Pink Bus Womens Bus Govt Bus

 கமெண்ட்ஸ்களில் கழுவி கழுவி ஊத்திக்கிட்டு இருக்காங்க. ஒருத்தன் பாட்டிக்கு லிப்ஸ்டிக் போட்டு விட்ட மாதிரி இருக்குன்னு சொல்றான். ஒருத்தன் ரெமோ படத்தில் பெண்ணாக நடித்த சிவக்கார்த்திகேயனோடு லிங்க் பண்ணி போட்டிருக்கான். 

Pink Bus Womens Bus Govt Bus

பஸ்சை பார்த்து வந்த சிரிப்பை விட, இவங்க போட்டிருக்க மீம்களை பார்த்தால் குபீரென சிரிப்புவருது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரில் ஓடும் பஸ்களை போட்டோவா எடுத்து போட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்க அடித்த லூட்டிகளை கொஞ்சம் ஸ்குரோல் பண்ணிப்பாருங்க.

Pink Bus Womens Bus Govt Bus