உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் உறுப்புக்கள் திருடப்படுவது தான். திரைப்படங்களில் காட்டுவது எல்லாம் உண்மை தாங்க. நேரடியாக நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை விட திருட்டுத்தனமாக நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தான் அதிகம். சரி அது போகட்டும் விடுங்க. இன்று நாம் அமெரிக்க மருத்துவர்களின் அசத்தலான சாதனையை பற்றி பேசவிருக்கிறோம்.
மனிதனுடைய உறுப்புகளை இன்னொரு மனிதனுக்கு வைத்து அறுவை சிகிச்சை செய்வது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் விலங்குகளின் உறுப்பை மனிதனுக்கு எடுத்து வைத்து அறுவை சிகிச்சை செய்வதை பற்றி நீங்க எப்போதாவது யோசித்திருப்பீங்களா? நம்மளைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த யோசனை வராது. அமெரிக்காவில் இதுபோன்ற யோசனைகள் பலருடைய மூளையிலும் உதித்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்மணிக்கு பன்றியின் சிறுநீரகத்தை வைத்து சோதித்து பார்த்து அதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர். மூளைச்சாவு அடைந்த பெண்ணின் பெற்றோரிடம் அனுமதி பெற்று இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரகத்தை உடலில் வைத்து பொருத்தாமல் ரத்த நாளங்களில் பொருத்தி மூன்று நாட்கள் வரை பொறுத்திருந்து பார்த்த மருத்துவர்கள் சிறுநீரகம் சீரான முறையில் இயங்குவதை உறுதிபடுத்தியுள்ளனர். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. விரைவில் விலங்குகளின் உறுப்புகளை வைத்து மனித உடலை முழுவதுமாக இயங்க வச்சிடுவாங்க போலிருக்கே? இந்த சம்பவம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை எங்களுக்கு கமெண்ட் மூலம் சொல்லுங்க.