notification 20
Exquisite
முன்னோர்கள் சொல்ல மறந்த பாவாடை தாவணி இரகசியம்! இந்த உண்மை தெரிந்தால் சுடிதார் இனமே அழிந்து விடுமா? அசர வைக்கும் உண்மை!

சினிமாவில் குளோஸ் அப் ஷாட் அடித்தே புடவையையும் தாவணியையும் மிகவும் கேவலமாக்கி விட்டார்கள். இன்றைய சூழலில்  வயசுப்பிள்ளைகளுக்கு பாவாடை தாவணி உடுத்தி அழைத்துச் செல்ல ரொம்பவும் யோசிக்க வேண்டியுள்ளது. இப்போதும் பாவாடை தாவணி உடுத்தும் பெண்கள் ஜாக்கெட்டுடன் சேர்த்து பின் குத்தி இடுப்பை மறைத்து சேலை கட்டுகின்றனர். அதற்கு பதிலாக முழுவதும் மறைக்க கூடிய ஜாக்கெட் தைத்து போட்டால் நன்றாக இருக்குமென கல்லூரி தோழி ஒருமுறை கூறினாள். இந்த மாதிரி காலத்துக்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப ஆடை கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகிறது.

நான் படித்த பள்ளியில் பாவாடை தாவணி தான் சீருடை. கல்லூரியில் சேலை தான். ஆனால் இன்றைக்கு திருமண விசேஷங்கள் போன்றவற்றில் கூட இதுவரை என் குழந்தைகள் பாவாடை தாவணி அணிந்ததில்லை. சேலை மட்டுமே அணிகின்றனர். மாறி வரும் உணவு, உடை பற்றிய கலாச்சார மேம்பாடுகளால் , குழந்தையின்மை பிரச்சினை இப்போது கூடி வருகிறது. அதிலும் பெண்களுக்கு தற்போது கர்ப்பம் தரித்தலில் கால தாமதம் ஏற்படுகிறது. 

அதில் ஆண்களுக்கும் சம்பந்தமுண்டு என்பதை பற்றி சமூகம் அக்கறை கொள்வது இல்லை. அங்கேயும் பெண்களை தான் குறை சொல்லுகிறார்கள். பாவாடை தாவணி அணிவதால் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் உண்டாகும் சிரமம் கூட மறைந்து விடும் என பாட்டி ஒருமுறை கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. குழந்தை இன்மை பிரச்சினைகளுக்கும், ஆடை அணியும் பழக்கத்திற்கும் சம்மந்தம் இருக்குமோ என்ற உணர்வுகளின் வெளிப்பாடு தான் என்னை இவ்வாறு பேச வைத்துள்ளது. 

பாவாடை காற்றோட்டம் உள்ள துணியாக இருப்பதால், அடி வயிற்றில் இயற்கையாகவே வரும் வெப்பத்தை சீர் செய்ய உதவியது. அந்தக் காலத்தில் உள்ளாடைகள் கிடையாது. பெண்களின் உடலில் இயற்கையான முறையில் வளரும் வளர்சிதை மாற்றத்தை மறைக்க அப்போது கண்டுபிடித்த உடை முறை தான் பாவாடை தாவணி. வெறுமனே உடையாக மட்டுமே சொல்லி வளர்ந்த முன்னோர்கள், அதன் பின்னால் மறைந்துள்ள அறிவியல் காரணத்தை கூறியிருந்தால், பல மேலை நாட்டு உடைகள் மறைந்தே போயிருக்கும். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts