notification 20
Daily News
சூரி மட்டும் தான் 50 பரோட்டா சாப்பிடுவாரா? நாங்கலாம் அதுக்கும் மேல! அசால்ட்டாக பரோட்டா சாப்பிட்டு பணத்தை அள்ளிய புள்ளிங்கோ!

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரி 50 பரோட்டா சாப்பிடுவது போல ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்துக்கு பிறகு சூரியின் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறியது என்று சொல்லலாம். பரோட்டா அனைவருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் 50 பரோட்டாவை சாப்பிடுவது கொஞ்சம் கூட நம்ப முடியாத வகையில் இருந்தது. நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட அந்த காட்சிக்கு அப்போது முதல் இப்போது வரை நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

parota eating ariyaloor district food competition

சூரி போல 50 பரோட்டா சாப்பிடுவது சாத்தியமில்லை என்பதால் அளவை வெகுவாக குறைத்து 10 பரோட்டா சாப்பிட்டால் பரிசு என்று அறிவித்து போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறிய இந்த பரோட்டா சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒரு பரோட்டாவின் விலை 10 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு மொத்தம் 10 பரோட்டா சாப்பிட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

parota eating ariyaloor district food competition

10 பரோட்டாவை வெற்றிகரமாக சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் அவர்கள் சாப்பிட பரோட்டாவுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை என்பதும் நிபந்தனை. பரோட்டா பிரியர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்டவர்களும் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இது தவிர கேங் பரோட்டா ஈட்டிங், சிக்கன் ரைஸ் ஈட்டிங் என பல போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சிக்கன் ரைஸ் சாப்பிடும் போட்டியில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை என்று கூறப்படுகிறது.

parota eating ariyaloor district food competition

சிக்கன் ரைஸ் போட்டியில் யாரும் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் ஒருவர் முழுமையாக இரண்டு சிக்கன் ரைஸ்களை சாப்பிட வேண்டும் என்கிற நிபந்தனை தான். கிராமப்பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த உணவுப் போட்டியை ஏரளாமானோர் கண்டுகளித்தனர்.

Share This Story

Written by

Gowtham View All Posts