Misc

ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது சரியா? காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் நடைமுறை எங்கு தொடங்கியது?

Jul 17 2021 01:36:00 PM

பொதுவா ஒரு கல்யாணம், வீட்டுல விசேஷம்னா அங்க உள்ள பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை நம்ம மக்கள் கடைபிடிக்கிறார்கள். காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது சரியா? எதற்காக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறோம் தெரியுமா? ஒரு சின்ன கதை சொல்றேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது வேறு பள்ளிக்கு சென்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்க பள்ளி தலைமை ஆசிரியர் விருதுகளை வழங்கினார்.

parent aasirvatham techer

முதலில் விருது வாங்கிய ஒரு பையன் விருதை வாங்கியவுடன் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 மாணவர்கள் தொடர்ந்து விருது வாங்கினார்கள். அவங்க எல்லாருமே அந்த முதல் பையன் செய்த மாதிரி தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். ஆனால் இதில் உண்மை என்னன்னா, முதலில் காலில் விழுந்த மாணவர் தான் மனதார காலில் விழுந்தார்.

parent aasirvatham techer

மத்த எல்லாருமே அவன் காலில் விழுந்தான், அதனால் நம்மளும் காலில் விழணும் என்று கடமைக்கு காலில் விழுந்தார்கள். ஒருத்தவங்க காலில் விழுவது த*வறு என்று சிலர் கூறுகிறார்கள். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கக்கூடாது, அது ஒரு அ*டிமைத் தனம் என்றெல்லாம் சொல்கிறார்கள். வீட்டில் உள்ள அப்பா, அம்மா, பெரியவங்க, நம்மை படிப்பில் உயர்த்திய ஆசிரியர்களின் காலில் விழுந்து மனதார வாழ்த்து பெறுவதில் எந்த தப்பும் இல்லை. மேலே சொன்ன அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.

parent aasirvatham techer

ஒரு காரியம் நடக்கணும், அதனால் அவங்க காலில் விழுவது என்பது அரசியல் வாதிகளை போல காரணத்திற்காக விழுவது. இந்த மாதிரி விழுந்தால் ஒரு பலனும் கிடைக்காது, நீங்க ஒரு காரியம் நடக்கணும்ன்னு தான் காலில் விழுகிறீர்கள் என்று ஆசீர்வாதம் வழங்கும் நபருக்கும் தெளிவாகத் தெரியும்.

parent aasirvatham techer