வெளியூர் சூழல், அங்குள்ள தண்ணீர், உணவு, பணிசூழல் என புது சூழலுக்கு ஏற்ப நாம் தகவமைத்து கொள்வோம் ஆனால் நமது உடல்? அதுவும் குறிப்பாக முடி! மேற்கண்ட புதிய சூழலுக்கு ஏற்ப முடி கொத்து கொத்தாக கொட்டும். சம்பாதிக்கும் பணத்தில் பாதி இதற்குத்தான் செலவு செய்ய வேண்டும். இருக்கும் இயற்கை மற்றும் செயற்கை முறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்திவிட்டு, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்க முடி வளர மெனக்கெடுவதில் 25% தான் வெளிப்புற முடி பராமரிப்பு. மீதி 75% உட்கொள்ளும் உணவில் தான் உள்ளது. முருங்கை கீரை, நெல்லிக்காய், கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி இவற்றையெல்லாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் முடிவளராது போய்விடுமா என்ன? நான் கண்ட மாற்றம் உணவுகள் மூலமாகவே நிகழ்ந்தது.
அடுத்து முடிக்கு வெளிப்புறமாக எடுத்துக்கொள்வதை பார்ப்போம். ஆர்கானிக் ஷாம்புகள், இவை ரசாயனம் அற்ற, முழுமையாக இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்று. இவற்றில் என்ன இருக்கும் என்றால், இயற்கை கொழுப்பு அமிலம் மற்றும் தாவர ஆ ல்கஹால்.
ஆர்கானிக் ஷாம்புகளை நீங்க வாங்கும் போது, சோடியம் லாரில் ச ல்பேட்(SLS), அம்மோனியம் லாரில் ச ல்பேட், லாரின் ஆ ல்கஹாலின், பிரோப்பிலீன் கிளைகோல், ஓலோபின் ச ல்போனேட், பராபென்ஸ் இவை எல்லாம் இல்லாமல் உள்ளதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். ஆர்கானிக் ஷாம்புகள் மட்டுமின்றி இதர வகைகளிலும் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆர்கானிக் ஷாம்புகள் முடிகால்களை வலுவாக்கும். சிலரது முடி, இந்த வகை ஷாம்புக்களை பயன்படுத்தும் போது முடி உதிர்வு ஏற்பட்டு பின்னர் வளரக்கூடும். ஷாம்புகள் மட்டுமின்றி சிலவகை இயற்கை எண்ணெய்கள் கூட முதலில் முடி உதிர்வை ஏற்படுத்திவிட்டு பின்னர் வளர செய்யும். இதற்கு காரணம், இந்த வகை ஷாம்பு மற்றும் எண்ணெய்கள் வலுவற்ற முடியை உதிர செய்து பின்னர் அதே வேர்க்கால்களில் வலுவான முடியை வளர செய்யும். சிலர் பயந்து கொண்டு பாதியிலே பயன்பாட்டை நிறுத்திவிடுவார்கள்.
ஆர்கானிக் ஷாம்புகள் பயன்படுத்திய பின்னர் கண்டிப்பாக உங்களுக்கு கண்டிஷனர் தேவைப்படாது. முடி பார்க்கவே பளபளப்பாக மற்றும் மிகவும் தடிமனாக இருக்கும். ஆர்கானிக் ஷாம்புகளை பொறுத்தவரையில் நுரை அதிகம் வராது, விலை கூடுதலாக இருக்கும். பெரும்பாலான ஆர்கானிக் ஷாம்புகள் இயற்கைக்கு தகுந்தது என சான்றளிக்கப்பட்டுள்ளது அதனால் இவற்றை பயன்படுத்துவது நமக்கு மட்டுமல்ல சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. SLS,SLES,PARABENS FREE என குறிப்பிட்டிருக்கும் ஆர்கானிக் ஷாம்புகள் நமது தலைமுடிக்கு சிறப்பான தேர்வு.