Daily News

இனிமே விசா தேவையில்லையாம்! ரஷ்ய அதிபர் புதின் அறிவித்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?

Sep 19 2022 08:13:00 AM

இந்தியர்கள் இனிமே விசா இல்லாமலே ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லலாம் என அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் புதின். உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ரஷ்ய அதிபர் புதின் அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்துள்ளார்.

Russia India visa relationship

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வர்த்தக உறவு மற்றும் மக்கள் தொடர்பை அதிகரிக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரைவில் விசா இல்லாத ரஷ்ய பயணம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.