neelambari-character-rajinikanth-recommend
1999ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் படையப்பா. இந்த படத்தில் நீலாம்பரி என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரஜினிக்கே டப் கொடுத்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். இன்றளவும் இந்த படையப்பா நீலாம்பரிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைப்பதற்கு முன்னர் ரஜினிகாந்த் மீனாவை தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினாராம்.

neelambari-character-rajinikanth-recommend
ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மீனா இந்த கதாப்பாத்திரத்திக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம். மீனாவின் கண்கள் மற்றும் முகம் குழந்தைத்தனமாக இருக்கும். மீனாவுக்கு நெகட்டிவ் ரோல் செட்டே ஆகாது. இந்த படம் மட்டுமல்ல எந்த படத்திலும் நெகடிவ் ரோல் மீனாவுக்கு செட் ஆகாது என்று ரஜினியிடம் சொல்லி இருக்கிறார் ரவிக்குமார். அதனால் தான் அந்த நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.
