nayanthara-visit-kuladeivam-temple
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நயன்தாரா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா தன்னுடைய பல வருட காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. திருமணம் நடந்து முடிந்த நாட்களில் இருந்தே நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கிறது.

nayanthara-visit-kuladeivam-temple
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் நயன்தாராவை புக் செய்ய நிறைய படத்தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருந்தன. இருந்தும் நயன்தாரா ஜவான் படத்திற்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டு தன்னுடைய சொந்த படமான கனெக்ட் படத்தில் நடித்தார். கனெக்ட் படம் நயன்தாராவிற்கு பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது நயன்தாராவை புக் செய்ய எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை.

nayanthara-visit-kuladeivam-temple
அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தில் இருந்து அஜித் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டதால் விக்னேஷ் வாழ்க்கையும் கேள்விக்குறியானது. இதுக்கெல்லாம் காரணம் திருமணம் முடிந்த பிறகு இவங்க குலதெய்வத்தை வழிபட செல்லவில்லையாம். தஞ்சாவூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின் குலதெய்வத்தை வழிபட்டால் பிரச்சனை சரியாகிவிடும் என்று ஜோசியர் சொன்னதால் விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்கள் குழந்தைகளுடன் தஞ்சாவூரில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வழிபட சென்றுள்ளனர்.
