இதற்கு முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு நம் இந்தியாவில் அதிக குளிர் நிலவுகிறது. சென்னை போன்ற அதிக வெப்பநிலை நிலவும் இடங்கள் கூட கொடைக்கானல், ஊட்டி போன்ற தட்பவெப்பநிலை நிலவுகிறது. இங்கேயே இந்த நிலைமை என்றால் குளிர் அதிகம் நிலவும் நாடுகளை பற்றி கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

உலகின் மிக அழகான நதி என்றால் அது நயாகரா நதி தான். நயாகரா அருவி உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. சுமார் 170 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கீழே விழும். உலகின் நிறைய பகுதிகளில் அதிக குளிர் நிலவி வருவதால் நயாகரா நதி முழுக்க பனியாக மாறியுள்ளது. சில இடங்களில் இந்த பனி தண்ணீருடன் சேர்ந்து அருவியில் இருந்து கீழே விழுகிறது. இதற்கு முன்னர் ஆண்டுகளில் கூட நயாகரா அருவியில் இதை போன்ற பனி உருவானது இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வருடத்தை போல முழு நயாகரா அருவியும் பனியாக மாறவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 1848ஆம் ஆண்டு தான் இதைப்போன்ற ஒரு சூழல் நயாகரா அருவியில் நிலவியது என்று குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.
