Daily News

நாங்களே அந்த மேட்டரை மறந்துட்டோம், நீங்க அதை மறுபடியும் கிளறாதீர்கள்! மடக்கி கேட்ட ரசிகரை கடுப்பில் திட்டிய நாகசைதன்யா!

Aug 03 2022 06:01:00 AM

பொதுவாக டாக்டர்கள் திருமணமானது மற்றொரு டாக்டருடன் இருக்கும். அதற்கு காரணம் வேலையில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், முக்கியமான விஷயங்களில் அவர்களின் மன நிலையை புரிந்துகொள்ள அதே தொழிலில் இருப்பவர்களாக இருந்தால் பரவாயில்லை என்ற சிந்தனை தான். இதே போல தான் சினிமா துறையும் இருக்கிறது. ஒரே துறையில் இருக்கும் இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் குறுகிய காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அந்த வரிசையில் திரைத்துறையில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது சமந்தா-நாக சைதன்யா இருவரின் பிரிவு.

samantha nagasaithenya

சினிமா துறையில் கொடிகட்டி பறந்த இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பின்னர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் விரைவில் இருவருக்குள்ளும் கருது வேறுபாடுகள் ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்த, அவர்கள் எப்படியாவது சமந்தா-நாக சைதன்யா சேர்ந்து விடுவார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது.

samantha nagasaithenya

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாக சைதன்யாவிடம் சமந்தா குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார். அதாவது நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவு முடிவை எடுத்து விட்டு அவரவர் பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். நாங்கள் அதனை கடந்து வந்துவிட்டோம். நீங்களும் அதனை கடந்து சென்றுவிடுங்கள். என்று கூறியதால் ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். இனி எப்போது இவர்கள் சேர்வார்கள் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.