notification 20
Timeless
இந்த மொபைல் நம்பர் உங்களிடம் உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு நிச்சயம் இது நடக்கும்!

தற்போதயநவீனகாலத்தில்மொபைல்போன்களின்பயன்பாடுமிகவும்அதிகரித்துள்ளது. அதிலும்நபர்ஒருவருக்குகுறைந்ததுஇரண்டுமொபைல்கள்அல்லதுமொபைல்எண்கள்தேவைப்படும்அளவிற்குஅதன்பயன்பாடுஅதிகரித்துள்ளது. இதிலும்குறிப்பாகமொபைல்எண்கள்நியூமராலஜிமுறையிலும், பேன்சிஎண்கள்முறையிலும்வாடிக்கையாளர்களால்தேர்வுசெய்யப்படுகிறது. அந்தஅளவிற்குமொபைல்எண்கள்தேர்வானதுமுக்கியத்துவம்பெறுகிறது.

அதுசரி, நீங்கள்தேர்வுசெய்யும்மொபைல்நம்பர்கள்உங்கள்உயிரையேபறிக்கும்என்றால்நம்பமுடிகிறதா? ஒருகுறிப்பிட்டபேன்சிநம்பரைஉபயோகித்த 3 நபர்கள்மர்மமானமுறையில்இறந்துள்ளார்கள்என்றுகூறினால்ஏற்றுக்கொள்ளமுடிகிறதா? அந்தநாட்டில், அந்தகுறிப்பிட்டமொபைல்நம்பரைபயன்படுத்தகூடாதுஎன்றுகூறும்அளவிற்குஅவ்வளவுபயத்தைகிளப்பியஅந்தநம்பர் 0888 888 888. பல்கேரியாநாட்டில்கடந்த 2010-ம்ஆண்டுமுதல்இந்தமொபைல்நம்பரையாருக்கும்வழங்ககூடாதுஎன்றுஅரசாங்கம்தடைவிதித்துள்ளது. அதற்குகாரணம்இந்தமூவரின்மர்மமானமரணம்தான்.

முதல் மரணம் : 2001 (Vladimir Grashnov, CEO, Mobitel)

பல்கேரியா நாட்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமான Mobitel நிறுவனத்தின் CEO வாக இருந்த Vladimir Grashnov இந்த எண்னை முதன் முதலில் பயன்படுத்த துவங்கினார். அதுவரையில் ஆரோக்கியமாக இருந்த அவருக்கு சில நாட்களிலேயே கேன்சர் நோய் ஏற்பட்டது. அதன் காரணமாக 2001-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 48. அதிகப்படியான ரேடியோ ஆக்டிவ் பொருட்களை பயன்படுத்தி இருந்தால் மட்டுமே இது போன்ற மரணங்கள் நிகழும் என்று அவரது பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவரது அலுவலகம், அவர் பயன்படுத்திய கார், அவ்வளவு ஏன் அவரது வீட்டில் கூட ரேடியோ ஆக்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசாரின் விசாரணை முடிவுகள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது மரணம் : 2003 (Konstantin Dimitrov)

அடுத்தபடியாக இந்த மொபைல் நம்பர் அந்த நாட்டை சேர்ந்த Konstantin Dimitrov என்ற ஒரு மாபியா டானிடம் சென்றது. ஆசையாக வாங்கிய அந்த எண் தான் அவருக்கான ஆபத்து என்பதை உணராமல் அவரும் அதனை பயன்படுத்த துவங்கியுள்ளார். 500 மில்லியன் யூரோவுக்கும் அதிக அளவிலான போதை பொருட்களை கடத்திய இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், கடந்த 2003-ம் ஆண்டில் இவர் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய மாபியா கும்பலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அவரது மரணத்தின் முக்கிய காரணியாக கருதப்படும் இந்த மொபைல் நம்பர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்துள்ளது.

மூன்றாவது மரணம் : 2005 (Konstantin Dishliev)

அடுத்ததாக இந்த எண் Konstantin Dishliev என்பவரிடம் சென்றுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை, இரண்டாவதாக இறந்த Konstantin Dimitrov-ன் சகோதரர். இவரும் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்னை பயன்படுத்திய குறுகிய காலத்தில் இவரும் இவரது எதிரிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதுவும் கள்ளக்கடத்தல் விவகாரத்தினால் நடந்தது என்று கூறப்பட்டாலும், அதன் பின்னணி குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கூர்ந்து கவனித்தால் அந்த நம்பரை உபயோகித்த இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நபரை வைத்து இருப்பவர் மரணிக்கிறார்என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில் இருக்கும் ரகசியம் என்னவென்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக அந்த நாட்டு அரசு அந்த குறிப்பிட்ட நம்பரை (0888 888 888) யாருக்கும் விநியோகம் செய்யக்கூடாது என்று கடந்த 2010-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts