notification 20
Timeless
நீங்க முதுகு காட்டினா, எங்க தலைவரு எதக்காட்டுவாரு தெரியுமா? இப்படியும் ஒரு சேலஞ்ச் வைரலாகிட்டு இருக்கு! ஆண்கள் எல்லோரும் தப்பிச்சு ஓடுங்க!

ஒரு ரெண்டு நாள் தாங்க பேஸ்புக் பக்கம் வராமல் இருந்தேன். அதற்குள் முதுகு challenge என ஒன்றை புதுசா அறிமுகப்படுத்தி, பசங்க எல்லாம் குதூகலமா ரசிச்சுக்கிட்டு இருக்காங்க. பெண் தோழிகள் தங்களுடைய முதுகை போட்டோ எடுத்து போடணுமாம். இவங்க அதை நோகாமல் உட்கார்ந்து ரசிப்பாங்களாம். ஏற்கனவே நடிகை ரம்யா பாண்டியன் இடுப்பு ஒருமுறை பேமஸ் ஆச்சு, அதாவது அவங்க ஒருத்தருடைய போட்டோவோட போச்சு. 

இப்ப இவங்க ஆரம்பிச்சு இருக்க முதுகு challenge, எந்த பெண் வேண்டுமானாலும்போட்டோ எடுத்து போடலாமாம். இதற்கு என்ன பயம் என்று, ஒரு சில பெண்கள், ஜன்னல் வெச்சு ஜாக்கெட் போட்டு, பின்னால் திரும்பி போட்டோ எடுத்து அப்லோட் பண்றாங்க. இதான் சாக்குன்னு, ஏகப்பட்ட பெண்கள் போட்டோ பேஸ்புக்கில் பகிறப்பட்டுள்ளது. இது கூடவே இன்னும் சில சேலஞ்ச்களை அறிமுகப்படுத்தி எப்படியாவது பொழுதுபோகணும் என நினைக்கிறாங்க. அதில் சிக்கிக்கொள்வது என்னவோ பெண்கள் மட்டும் தான். 

பெண்களை ரசிக்க இந்த மாதிரி எல்லாம் ஈன வேலை பார்க்க வேண்டாம் என யாரோ சொல்லியிருப்பாங்க போல, உடனே ஆண்கள் இந்த சேலஞ்ச் பண்றேன்னு இறங்கிட்டாங்க. ஆள் ஆளுக்கு முண்டாசு பனியன் போட்டும், ஒரு சிலர் சட்டையே போடாமலும் முதுகு பகுதியை போகஸ் பண்ணி, போட்டோவா, போட்டு தள்ளுறாங்க. அதில் ஒன்றை பகிர்ந்துள்ள ஜி. பி முத்து ரசிகர்கள், நீங்களாவது முதுகு மட்டும் தான் எடுத்து போடுவீங்க. எங்க தலைவர் எடுத்துப்போட்டா தாங்க மாட்டீங்கன்னு ஒரு போட்டோ பதிவிட்டுள்ளனர். 

அது என்னடான்னு பார்த்தா, அவர் கடுப்பாகி வேட்டியை உருவிய காட்சி அது. இதற்கு மேல் உங்க சேலஞ்ச் எல்லாம் பார்க்க நான் ரெடியா இல்லப்பா, ரெண்டு நாள் பேஸ்புக்கு விட்ட லீவை, இனி ரெண்டு வாரமா மாற்றிக்கொண்டு இந்தப்பக்கமே தலை வைத்துபடுக்கப்போவதில்லை. ஜி.பி முத்துவை வைத்து வேறு என்ன சேலஞ்ச் எல்லாம் செய்யலாம் என்ற ஐடியா இருந்தால், கீழே சொல்லுங்க. அதையும் வைரலாக்கிருவாங்க நம்ம பசங்க. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts