தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் மொட்டை ராஜேந்திரன். தமிழ் சினிமாவில் இவரை முக்கிய நடிகராக எல்லோருக்கும் அடையாளம் காட்டியது நான் கடவுள் படம் தான். அந்த படத்தில் இவர் நடித்த வில்லன் கதாப்பாத்திரம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. அன்றுமுதலே இவர் நான் கடவுள் ராஜேந்திரன் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
நான் கடவுள் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின்னர் விளையாட்டாக சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அன்று முதலே இவரை காமெடி கதாப்பாத்திரங்களில் புக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதுவும் நடிகர் விஜய்க்கு நான் கடவுள் ராஜேந்திரனை ரொம்ப பிடிக்குமாம். இவர் என் படத்தில் நடித்தாலே படம் ஹிட் ஆகிடும், ரொம்ப ராசியான ஆளு, அவரையும் நம்ம படத்துக்கு புக் பண்ணுங்க என்று சொல்வாராம்.
சமீபத்தில் நீங்க ஏன் எப்பவும் மொட்டை தலையோடவே சுத்துறீங்க, எப்படி இந்த பிரச்சனை உங்களுக்கு வந்துச்சு என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். கேரளாவில் நடந்த ஒரு படப்பிடிப்பில் இவர் அடி வாங்குவது போன்ற ஒரு காட்சி வைத்தார்களாம். அந்த காட்சியில் இவர் அடி வாங்கி அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்த நீரில் விழ வேண்டும். அந்த தொழிற்சாலை நீரில் விழுந்ததில் இருந்து இவர் தலையில் இருந்த எல்லா முடியும் கொட்டிவிட்டது என்று சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் க*ஷ்டமா இருந்துச்சு, இப்போ இதுவே எனக்கு அடையாளமா மாறிவிட்டதால் ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லியுள்ளார்.