ஆணோ அல்லது பெண்ணோ 100க்கு 90 பேர் செ க்ஸ் மட்டும் தான் வாழ்க்கை என நினைக்கின்றனர். அதனால் தான் கிடைத்த அந்த வாழ்வையும் நாசமாக்கிக் கொள்கின்றனர். செக்ஸ் மட்டும் வாழ்க்கை கிடையாது. ஆனால் அதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு குடும்பம் தழைக்கவும், ஒரு ஆண் மற்றும் பெண் தன் சந்தோசத்தை பகிரவும் அது அவசியம். என்னை பொறுத்த வரையில் ஆண் பெண் உடலுறவு சம்பந்த பட்ட பிரச்சனை தெரிய வர சில மாதங்கள் மற்றும் வருடம் கூட ஆகலாம். அதற்கு பல காரணம் சொல்ல முடியும்.
ஆனால் பெண்ணுக்கு ஆணிடம் பிரச்சனை என்று தெரிந்த உடன் அவர் அதை சொல்வது அவரது தாயாராக தான் இருக்க முடியும். தாயும் மகளும் பக்குவப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றால் இதற்கு பதில் தேட ஆரம்பிப்பார்கள் அல்லது கோர்ட்டில் போயி நின்னு விவாகரத்து வாங்குவார்கள். இன்றைய தலைமுறையினருக்கு பொறுமை கிடையாது. 90 சதவிகிதம் கோர்ட்டில் போயி விவாரத்தில் தான் முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் மக்கள் அதற்கு விடை தேடுவார்கள். இன்றைய நவீன உலகத்தில் ஆணின் பிரச்சனைக்கு ஏற்ப விடை உள்ளது.
சில பேருக்கு இன்றைய வாழ்க்கை மற்றும் வேலை சம்பந்த பட்ட விஷயங்களால் விந்துக்கள் குறைவாக உள்ளது அது மட்டும் இல்லாமல் சில ஆண்களுக்கு அதை பற்றி புரிதல் இல்லாமல் தாங்களாகவே கற்பனை பண்ணி கொண்டு வாழ்க்கை குலைத்து கொள்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவரை அணுகி விடையை தேட வேண்டும் அது தான் சால சிறந்தது. அப்படி விடை கிடைக்காத பட்சத்தில் வயதை மனதில் வைத்து விவாகரத்து வாங்குவது தான் சாலச்சிறந்தது. இதெல்லாம் தாண்டி தற்போதைைய நிலையில் நிறைய பெண்களுக்கு pcod என்ற குழந்தை பிரச்சனை இருகிறது.
இதெல்லாம் திருமணம் முன்பு யாரும் மாப்பிள்ளை வீட்டார் இடம் சொல்வதில்லை. அதற்கும் பெண்களை சப்போர்ட் செய்து IVF செய்து கொள்ளளாம் வா என்னும் கணவர்களும் இருக்கின்றனர். இவ்வளவு மெச்சுராக பல ஆண்கள் நடந்து கொள்ளும் நிலையில், ஒரு ஆணுக்கு சின்ன குறை என்றாலும், அவனுக்கு ஆண்மை குறைவு எனக்கூறி விவாகரத்து செய்யும் பெண்களை என்னவென்று சொல்வது? எனக்கு தெரிந்து எரக்டில் டிபங்ஷன் உள்ள ஆணும் தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ள உறவில் விருப்பம் இல்லாத பெண்ணும் இணைந்து வாழலாம் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.