notification 20
Misc
எவ்வளவு காசு போட்டு வாங்கினாலும் போனுடன் வந்த பேட்டரி அளவிற்கு புதிதாக வாங்கும் மொபைல் போன் பேட்டரி வேலை செய்வதில்லை ஏன் தெரியுமா?

ஸ்கூல் படிக்கும் பள்ளிக் குழந்தைகளில் இருந்து நாளைக்கு பாடையில் போகப்போற பாட்டி வரை எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழைய மாடல் keypad போன்கள் ஒரு தடவை சார்ஜ் போட்டால் ஒரு வாரத்திற்கு சார்ஜ் மீண்டும் போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஆனால் தற்போது சந்தையில் விற்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் ஒரு நாளைக்கு சார்ஜ் நிற்பதே பெரும் தலைவலியாக இருக்கிறது. மொபைல் போன் வாங்கி ஒரு வருட வாரண்ட்டி இருக்கும் வரை எந்த போன்களிலும் மிகப்பெரிய அளவில் பிரச்சனை வராது. ஆனால் வாரண்ட்டி முடிந்து சில நாட்களிலேயே மொபைல் போனின் பேட்டரி பழுதாகிவிடும்.

நீங்க எந்த கடைக்கு போய் புதிதாக பேட்டரி மாற்றினாலும் பழைய மாதிரி சார்ஜ் நிற்பதில்லை. அதுவும் டூப்ளிகேட் அல்லாத ஒரிஜினல் பேட்டரி வாங்கினாலும் அதிலும் அதே பிரச்சனையை தான் சந்திப்பீர்கள். இதற்கு காரணம்  போனுடன் வரும் பேட்டரிக்கள் மட்டும் தான் தரமானதாக தயாரிக்கப்படுமாம். அதற்குப் பின்னர் வாங்கும் அத்தனை பேட்டரிக்களிலும் தரம் குறைவாகத்தான் இருக்குமாம்.

நீங்க எந்த கடையில் பேட்டரி வாங்கினாலும் அவர்கள் சொல்லும் ஒரே விஷயம் இந்த பேட்டரிக்கு வாரண்ட்டி, கியாரண்ட்டி கிடையாது. சி ரமம் பாக்காம சீக்கிரம் புது போன் வாங்கிக்கோங்க என்று சொல்வார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இது அவங்க வியாபார யுக்தியாகக் கூட இருக்கலாம். தரம் குறைந்த பேட்டரியை விற்பனை செய்தால் ஒன்னு அவங்க மீண்டும் அதே பொருளை அடிக்கடி மாற்றுவார்கள் அல்லது புது மொபைல் வாங்கிவிடுவார்கள். நாமும் மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதால் புது போன் வாங்குவதைத் தவிர வேற வழியும் இல்லை. பழைய போன்களில் டச் மற்றும் பேட்டரி பழுதானால் செலவைப்ப் பார்க்காமல் புது மொபைல் போன் வாங்குவது தான் சிறந்தது.

Share This Story

Written by

Karthick View All Posts