Daily News

தவறுதலாக பூஜ்ஜியத்தை சேர்த்திருப்பார் எடப்பாடி! கல்யாண செலவு கணக்கை வெளியுலகுக்கு அறிவித்த அமைச்சர் மூர்த்தி!

Sep 30 2022 11:59:00 AM

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். அவருடைய பேச்சில் அமைச்சர் மூர்த்தி குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தது. திமுகவை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் தான் தனது மகனுக்கு திருமணத்தை நடத்தி முடித்தார்.

minster moorthy edapadi palanisamy costly wedding

அமைச்சர் மூர்த்தி தனது மகனுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளார். இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வந்திருக்கும்? 30 கோடி செலவு செய்து ஆடம்பர திருமணத்தை செய்து முடித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தான் செலவு செய்தது வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே. 30 கோடி செலவில் திருமணம் செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

minster moorthy edapadi palanisamy costly wedding

சமபந்தி முறையில் நடைபெற்ற என் மகன் திருமணத்தில் உணவுக்காக 1.5 கோடி செலவு செய்யப்பட்டது. இதர செலவுகள் அனைத்தையும் சேர்த்துப்பார்த்தால் 3 கோடி ரூபாய் தான் திருமண செலவு என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 30 கோடி என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பது போல பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.