notification 20
Daily News
கட்சி நிர்வாகியை கல் எடுத்து அடிக்கும் அமைச்சர்: இதெல்லாம் ஒரு காரணமா? லீக் ஆன சீக்ரெட் வீடியோ!

தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பேசுகிறார். 

இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மக்கள் சந்திப்பு மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது. பால்வளத்துறை அமைச்சர் கட்டுமானப் பணியை பார்வையிட்டபோது கட்சி நிர்வாகிகளிடம் தனக்கு நாற்காலியைக் கொண்டு வரச் சொன்னார். அவர்கள் ஒரு நாற்காலியை மட்டும் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த அமைச்சர் அவர் மீது கற்களை வீசினார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் செயலால் தினம் தினம் தன்னுடைய தூக்கம் கெடுவதாக கூறியிருந்தார். அடிக்கடி அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவதால் அவ்வாறு பேசி இருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts