maybemaynot
notification 20
Misc
எம்.ஜி.ஆர் எத்தனை முறை காமராசரை விருந்துக்கு அழைத்தும் காமராசர் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு செல்லாதது ஏன்?

தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்களில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் காமராசர். இப்பவும் காமராசர் போல யாரவது மீண்டும் பிறந்து வந்து இந்த நாட்டை ஆட்சி செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கி தவிக்கிறார்கள். சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.ஜி.ஆர். காமராசரை எங்கு பார்த்தாலும் அய்யா, ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர் அழைக்கும் போதும் கண்டிப்பா வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் வீட்டுக்கு செல்வதை காமராசர் தவிர்த்து வந்தார். ஒரு முறை எம்.ஜி.ஆர். சிவாஜி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காமராசர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடித்தவுடன் மீண்டும் எம்.ஜி.ஆர். அவர்கள் காமராஜரிடம் அய்யா எங்க வீட்டுக்கு விருந்துக்கு ஒரு நாள் நீங்க கண்டிப்பா வரணும் என்று கேட்டுள்ளார்.

தம்பி உங்க வீட்டுல விருந்து எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும். அறுசுவை உணவு என்று அசத்தி விடுவீர்கள். நான் ஒரு மக்கள் பணியாற்றுபவன். எனக்கு ரெண்டு இட்லி, தயிர் சாதம் போதும். நான் உன் வீட்டுக்கு வந்து அந்த அறுசுவை உணவை சாப்பிட்டால் என் நாக்கு அந்த சுவைக்கு அடிமையாகி விடும். நான் தினமும் அந்த அறுசுவை உணவுக்கு எங்க போவது, அதனால தான் நான் உன் வீட்டுக்கு விருந்துக்கு வருவதை தவிர்த்து வருகிறேன் என்று காமராசர் சொல்லியுள்ளார். காமராசர் பதிலை கேட்ட எம்.ஜி.ஆர். ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டாராம். என்னடா இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனுஷன் இருக்காரே என்று.

Share This Story

Written by

Karthick View All Posts