Lushgreen

மாஸ்கோவில் இருக்குற மெட்ரோ 2 பாதையை பத்தி ரஷ்யர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ரயில் பாதையை ரகசியமாக பயன்படுத்துவதன் பின்னணி என்ன?

Oct 16 2021 10:53:00 AM

உலகில் எண்ணற்ற மர்மமான விஷயங்கள் மறைந்துள்ளன. ஒரு சில மர்மங்கள் இயற்கையாகவே பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. ஆனால் ஒரு சில விஷயங்கள் மனிதர்களால் மறைக்கப்பட்டு வெளியுலகுக்கு வேறு கோணத்தில் காட்டப்படுகிறது. அந்த வகையில் மனிதர்களால் மறைக்கப்பட்டுள்ள ஒரு முக்கியத்துவம் மிக்க இடம் தான் மாஸ்கோவில் இருக்கும் மெட்ரோ 2 என்ற ரயில் பாதை.

metro-2-railway moscow-russia

அமெரிக்காவில் இருக்கும் ஏரியா 51 பகுதியை பற்றி அமெரிக்கர்கள் யாரும் வாய் திறந்து பேசமாட்டாங்க. இந்த விஷயத்துல அமெரிக்கர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு திறமை மிக்கவர்களாக ரஷ்யர்கள் இருக்கின்றனர். ஆமாங்க. மெட்ரோ 2 என ஒரு பாதையே மாஸ்கோவில் கிடையாது என சத்தியம் பண்ணி சொல்லுறாங்க. ஆனால் அவுங்க சொல்றத அப்படியே கேட்டுக்க நாம் ஒன்னும் முட்டாள் கிடையாதே.

metro-2-railway moscow-russia

உண்மையில் மெட்ரோ 2 என்ற பாதை மாஸ்கோவில் உள்ளது. இதை ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பாதாள ரயில் பாதை பற்றி வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாமல் இருக்கிறது. இந்தப்பாதையை குறித்த தகவல்கள் ரகசியமாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.

metro-2-railway moscow-russia

இந்தப்பாதை மர்மமாக பாதுகாக்கப்படுவது எதற்காக என்று விளங்கவில்லையா? அதற்கு காரணம் இது ரஷ்ய அதிபருடைய கிரெம்ளின் மாளிகை மற்றும் ரஷ்யாவின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் இரண்டையும் இணைக்கும் பாதையாக இருக்கிறது. எனவே இதைப்பற்றிய ரகசியம் வெளியே தெரிந்தால் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் மற்றும் அதிபர் மாளிகை குறித்த ரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும். இது தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாட்டவருக்கு தெரிந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால் இந்த மெட்ரோ 2 பாதை ரகசியப்பாதையாக இருந்து வருகிறது.

metro-2-railway moscow-russia

யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் எனக்கு எப்படி தெரிந்தது என்று நீங்க கேள்வி எழுப்பலாம். நான் என்ன ரஷ்யாவின் பாதுகாப்புத்துறையிலா வேலை பாக்குறேன். இதைப்பத்தி தெரிஞ்சிக்கிறது சாதாரண காரியமல்ல. யாருமே நுழைய முடியாத இடம் என்ற தலைப்பில் இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் இந்த இடமும் மிக முக்கியமான இடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அதைப்பற்றி சில தகவல் கூறினேன் அவ்வளவுதான்.