பாவாடை அணியக்கூடாது என்று சொன்னவுடன் பெண்கள் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க. இந்த சட்டத்துக்கும் பெண்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. பெண்கள் பாவாடை அணியக்கூடாது என எந்த மடையனாவது சொல்லுவானா? இது ஆண்களுக்கான விதிமுறையாகும். திரும்பவும் என்னை பைத்தியக்காரன் என்று நினைக்காதீங்க. ஆண்கள் பாவாடை அணிவார்களா என்று வியப்படைய வேண்டாம். நம் நாட்டில் ஆண்கள் லுங்கி கட்டுவதை போல வெளிநாட்டில் ஆண்கள் பாவாடையை லுங்கி போல அணிகின்றனர்.
இவ்வளவு குழப்பம் மிகுந்த சட்டம் எந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது என்று கேட்கிறீர்களா? அது நம்ம இத்தாலி தான். இத்தாலி நாட்டில் பொது இடங்களில் ஆண்கள் பாவாடை அணிவது சட்டப்படி குற்றமாகும். வேண்டுமானால் வீட்டுக்குள் அணிந்துகொள்ளுங்கள். இத்தாலிய தெருக்களில் ஆண்கள் பாவாடையுடன் நடமாட முடியாது.
அப்படி யாரேனும் பாவாடையுடன் போவது தெரிந்தால் அவர்களை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு போய் வச்சி செஞ்சிருவாங்க. பாவாடை அணிந்து நடமாடும் நபரை கைது செய்து கடுமையான தண்டனைகளை கொடுப்பாங்களாம். எத்தனையோ உடைகள் இருக்கும்போது பாவாடை விஷயத்தில் இவுங்க ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது.
ஆனால் இதற்கான காரணத்தை யாரும் சரிவர சொல்ல மாட்டிக்கிறாங்க. பலரும் சொல்லும் பொதுவான காரணம் என்னவென்றால் பொதுவெளியில் மரியாதையுடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் கண்ணியத்துடன் உடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்பதாகும். பாவாடையின் மூலம் கெளரவம் குறைவதாக இத்தாலியர்கள் கருதுகின்றனரா எனத்தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தால் என்ன? இத்தாலிக்கு செல்வதாக இருந்தால் பாவாடை அணிந்து தெருக்களில் நடமாடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொளுங்கள் ஆண்களே.