இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வருபவர் சூர்யகுமார் யாதவ். அண்மையில் நடந்த T20 உலகக்கோப்பையில் 239 ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூஸிலாந்து அணியுடன் நடந்த T20 போட்டியிலும் 111 ரன்களை அபாரமாக குவித்தார். அந்த போட்டி முடிந்ததும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து தள்ளினார்.

அதேபோல தற்போது ஆஸ்திரேலியா அணியின் ஆள் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் சூரியகுமார் யாதவை பாராட்டி பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம். இந்த போட்டியை நான் நேரலையில் பார்க்கவில்லை. அடுத்த நாள் தான் ஹைலைட்ஸ் பார்த்தேன். அவர் அடித்த ஷாட்கள் தற்போது கிரிக்கெட் விளையாடும் எந்த வீரராலும் அடிக்க முடியாது.

அவரை பார்த்தால் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது. பிக் பாஸ் லீக்கில் அவரை விளையாட வைக்க வேண்டும் என்றால் அவரை ஏலம் எடுப்பது ரொம்ப கஷ்டம். அதற்கான பணம் பிக் பாஸ் லீக்கில் இடம்பெறும் அணிகளிடம் இல்லை. அவரை பிக் பாஸ் லீக் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்றால் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு நிறைய வீரர்களை நீக்க வேண்டி இருக்கும். அவ்வளவு திறமைகளை உள்ளடக்கியவர் தான் சூர்யகுமார் யாதவ் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் கிளீன் மேக்ஸ்வெல்.
