அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். இந்த படத்தில் இவருடைய துள்ளலான நடிப்பு அனைவராலும் விரும்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார். இவர் பார்ப்பதற்கு சற்று குண்டாக நடிகை குஷ்பூ போல இருப்பார். இதனால் இவரை அடிக்கடி குண்டு பூசணிக்காய் என்று ரசிகர்கள் கிண்டல் செய்துவந்தனர்.
ரசிகர்கள் தொடர்ந்து இவரை கிண்டல் செய்ததால் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஏன் படங்கள் நடிக்கவில்லை என்று அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். 2019ஆம் ஆண்டு மஞ்சிமா மோகனுக்கு காலில் அ*றுவை சி*கிச்சை நடந்துள்ளது. அந்த அ*றுவை சி*கிச்சைக்கு பின்னர் இவருக்கு உடம்பு போட்டுவிட்டது. நிரைய ம*ருத்துவர்களை தொடர்பு கொண்டு சி*கிச்சை பெற்று வந்தும் இந்த உடல் பருமன் பிரச்சனை சரி ஆகவில்லை.
ஒரு வழியாக கடைசியில் ஒரு டா*க்டரைப் பார்த்து உடல் பருமன் பிரச்சனையை சரி செய்துள்ளார். நாங்களும் மனுசங்க தான, எல்லாருக்கும் வர மாதிரியான பிரச்சனைகள் எங்களுக்கும் வரத்தானே செய்யும். எங்களை மட்டும் ஏன் இப்படி கிண்டல் பண்ணுறீங்க, தொடர்ந்து என்னை கிண்டல் செய்த காரணத்தால் தான் இத்தனை ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் இருந்தேன் என்று பேட்டி கொடுத்துள்ளார். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி இந்த விஷயம் முடிந்துவிட்டது என்று திரைவட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.