notification 20
Misc
இ*றந்தவர்களின் முடியை பாதுகாப்பாக வைத்திருக்கலாமா? அப்படி வைத்திருந்தால் வீட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா?

வீட்டில் யாரேனும் இ*றந்து விட்டால் அவங்க சம்மந்தமான எல்லா பொருட்களையும் இவருக்கு இ*றுதிச் ச*டங்கு செய்யும்போது தூக்கி எறிந்து விடுவார்கள். தங்கம், வெள்ளி போன்ற அவர் பயன்படுத்திய பொருட்களை தவிர அவர் அணிந்திருந்த ஆடைகள், கட்டில், பாய், மெத்தை போன்ற பொருட்களை தூக்கி எறிவதை நம் தமிழ் மக்கள் ஒரு ச*டங்காக பின்பற்றி வருகிறார்கள்.

அதுவும் அ*வட்டத்தில் இ*றந்தவர்கள் சம்மந்தமான பொருட்களை நம் மக்கள் தொடக் கூட மாட்டார்கள். தி*ண்ணை, அ*வட்டம் விழுந்த வீடுகளின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். தற்போது வெளிநாடுகளிலும், நம் இந்தியாவிலும் ஒரு வி*சித்திரமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இ*றந்தவர்களின் தலை முடியை எடுத்து அதில் மோதிரம், அடையாளச் சின்னங்கள் செய்து தங்களுடன் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஆரம்பித்துள்ளது. இது த*வறு என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.

இ*றந்தவர்களின் பொருட்களையே நம் மக்கள் தூக்கி வீசும் இந்த காலத்தில் அவர்களின் தலை முடியை பாதுகாத்து தங்களுடன் வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்று சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருவரின் முடியை பாதுகாத்து அதில் அடையாளச் சின்னம் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார் என்றால் அந்த இ*றந்த நபர் கண்டிப்பாக இவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட முக்கியமான நபராக இருக்க வேண்டும்.

ஒருவர் இ*றந்த பின்னும் அவருடைய எண்ணங்கள், அவருடைய அடையாளம் நம்முடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த த*வறும் இல்லை. கண்டிப்பாக இ*றந்த நபர்களின் முடியை வைத்து அடையாள சின்னங்கள் செய்வதில் எந்த த*வறும் இல்லை என்று வெளிநாட்டு மக்கள் சொல்கிறார்கள். அந்த மாதிரியான அடையாளச் சின்னங்கள் செய்வதால் அவர் நம்முடன் கூடவே இருந்து நம்மை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல உதவுவார் என்றும் வெளிநாடுகளில் இந்த பழக்கங்களை கடைபிடிக்கிறார்கள். எல்லாத்துக்கும் அவங்க மனதில் ஓடும் எண்ணங்கள் தான் காரணம். நமக்கு அவரின் நியாபகம் எப்போதும் நம்முடன் இருக்கவேண்டும் என்று இந்திய மக்கள் இந்த மாதிரி நினைவுச் சின்னங்கள் செய்துகொள்வதில் எந்த த*வறும் இல்லை.

Share This Story

Written by

Karthick View All Posts