notification 20
Lushgreen
கோவில் முழுவதும் பாம்புகள் இருக்கும்! தரிசனம் செய்ய வரும் பக்கதர்களை தொ*ந்தரவு செய்யாத பாம்புகள்! மலேசியாவில் உள்ள அற்புத பாம்புகள் ஆலயம்!

மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் என்றால் அது நம்ம முருகப்பெருமானின் ஆலயம் தான். உலகில் உள்ள எந்த நாட்டு மக்களும் மலேசியா சென்றாலும் முருகப்பெருமானின் திருவருள் பெறாமல் திரும்ப மாட்டார்கள். அந்த மலேசியாவின் அருவில் மற்றொரு விசேஷமான பாம்புகள் ஆலயம் உள்ளது. மலேசியாவிற்கு மிக அருகில் பினாங்கு தீவுகள் உள்ளது. இந்த தீவு முழுக்க பாம்புகளால் நிறைந்துள்ளது. இங்கே பாம்புகளுக்கென்று அற்புதமான ஆலயம் ஒன்று உள்ளது.

இந்த தீவில் வாழ்ந்த காங் என்ற மன்னர் ஆரம்பம் முதலே பாம்புகளின் மீதும், பூச்சிகளின் மீதும் அதீத அன்பு வைத்திருந்தார். எப்போதும் தன்னுடனே நிறைய பாம்புகளை தன் அரண்மனையில் வளர்த்து வந்தார். இவர் தன்னுடைய 65ஆவது வயதில் இ*றந்துவிட்டார். அதன் பின்னர் இந்த மன்னர் வாழ்ந்த அரண்மனையில் அந்த மன்னரின் விருப்பத்திற்கு இணங்க அந்த அரண்மனையை கோவிலாக கட்டினார்கள்.

அந்த கோவில் முழுக்க பாம்புகள் தங்குவதற்கு ஏற்ப வசதிகளுடன் வளைவான பகுதிகளை அமைத்துள்ளார்கள். பாம்புகள் இரவு நேரங்களில் இங்கே வந்து தூங்கிவிடும். அதேபோல இந்த கோவிலில் உள்ள குளத்தில் நிறைய பாம்புகள் இருக்கும். அனைத்து பாம்புகளும் அதிக வி*ஷத்தன்மை கொண்டவை.

இருந்தாலும் இங்கே சென்று வழிபடும் மக்களை ஒன்றும் செய்யாது. 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த கோவிலில் நிறைய வி*ஷத்தன்மை கொண்ட பாம்புகள் இருந்தன. பின்னர் மக்கள் அதிகம் வந்து செல்வதால் அவற்றின் வி*ஷத்தன்மையை நீக்கி கோவிலில் வளர்க்கிறார்கள்.

இந்த கோவிலில் காங் மன்னரின் சிலை இருக்கும். பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏதுவாக கோவிலை வடிவமைத்துள்ளார்கள். பாம்புகள் நீங்கள் வழிபடும்போது உங்களை நோக்கி வந்தால் உங்கள் வேண்டுதல் உடனே நிறைவேறும். நீங்கள் நினைத்த காரியம் கூடிய விரைவில் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தை மலேசியா செல்லும்போது ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வந்தால் பல அற்புதங்களை கண்களால் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts