Daily News

புடவை கட்டிக்கிட்டு விளையாட முடியாதுன்னு யார் சொன்னாங்க? மேடத்தோட வேற லெவல் ஆட்டத்தை வந்து பாருங்கய்யா!

Sep 20 2022 10:33:00 AM

மஹூவா மொய்த்ரா என்ற பெண்மணி புடவை அணிந்தபடி கால்பந்து விளையாடிய சம்பவம் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. மஹூவா மொய்த்ரா சாகசங்களை விரும்பும் இணையவாசி ஒன்றுமில்லை. அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு சென்று கலக்கிவரும் அவருக்கு அரசியல் தவிர்த்து மற்ற விஷயங்களிலும் அதிக ஆர்வம் உள்ளது.

mahua moitra West bengal MP football playing in saree

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா தன்னுடைய துணிச்சலான பேச்சு மூலம் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றவராக இருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் அவரைப்பற்றி இன்னும் அதிகமாக பேசவைக்கிறது. ஸ்னிக்கர்ஸ், கூலர்ஸ் மற்றும் புடவை அணிந்தபடி கால்பந்து விளையாடும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

mahua moitra West bengal MP football playing in saree

கிருஷ்ணா நகர் பகுதியில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர் களத்தில் இறங்கி சிறிது நேரம் விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.