maybemaynot
notification 20
Daily News
Love Today மாதிரி ஒரு குப்பை படம் மறுபடியும் வருமா? தமிழக மக்கள் மூளை இந்த அளவுக்கு நாறிப்போச்சாம்!

Love Today படத்தில் கதைதான் ஹீரோ.  உண்மையான ஹீரோவுக்கு வேலை இல்லை. இறுதிவரை உங்கள் இருக்கையில் ஒட்ட வைக்கும் கச்சிதமான திரைக்கதையை வைத்திருக்கிறார்கள். இன்றைய இன்டர்நெட் உலகத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஹீரோவை பார்த்தால் கடுப்பா இருக்கு. இந்த படம் வந்த பிறகு பல பேருக்கு இப்படியும் தப்பு செய்யலாம் என்ற வழி தெரிந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களின் தரம் தாழ்ந்து வருது இந்த படத்திற்கு கொடுத்த ஆதரவை பார்க்கும்போது கண்டேன். 

பறக்கும் விசில்கள் மற்றும் ஆதரவு எல்லாம் இன்றைய இளைய தலைமுறையினருடையதே. அனைவரும் எதாவது ஒரு விதத்தில் இந்தத் திரைப்படத்தில் வரும் காட்சிகள் தங்கள் வாழ்வில் நடந்ததாகவோ அல்லது நடந்து கொண்டிருப்பதாகவோ ,நினைத்து ரசிப்பதும் கொண்டாடுவதும்தான் இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம். இளைய தலைமுறையின் எல்லாருடைய வாழ்விலும் இவ்வாறு நடக்கவில்லையென்று சொன்னாலும், பெரும்பாலானவர்களின் வாழ்வில் நடப்பதென்னவோ இத்திரைப்படத்தின் காதல் கதை போலத்தான். 

அடுத்தவங்க வாழ்க்கையை எட்டிப்பார்த்தால் நாறிக்கிடக்கும் என்று சொல்வாங்க. அடுத்தவங்க என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகம். அதன் வெளிப்பாடு தான் Love Today படத்தின் வெற்றி. இது புதிய தலைமுறையினரை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களில் எந்த எந்த விஷயங்கள் அதிகமாக பேசு பொருள் ஆகிறதோ அதை மட்டுமே மைய கருவாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் உள்ள காட்சிகளில் ஏதாவது ஒன்று இளைஞர்கள் எல்லார் வாழ்க்கையிலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடந்து இருக்கும். அதனால் எல்லோருக்கும் படம் பிடித்து விட்டது. படம் ஓடுகிறது.

ஆனால் சிறுது யோசித்து பார்த்தால் அவ்வளவு தரமான படமாக எனக்கு தோன்றவில்லை. சமுதாய சீரழிவை காண்பிப்பதாகவும் அதை நோக்கி நம் எல்லோரையும் பயணிக்க வைப்பதற்க்கான படமாக எனக்கு தோன்றுகிறது. இதை விட பல சிறப்பான கருத்துக்கள் சொன்ன படங்களில் சில தோல்வியை தழுவி இருக்கிறது. 2 மணி நேரம் தீமையை சொல்லிவிட்டு கடைசி 10 அல்லது 15 நிமிடம் நல்ல விஷயங்களை சொன்னால் அது நியாயமில்லை. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts