love-today-hindi-rights-amir-khan
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவருடைய நடிப்பில் வெளியான படம் லவ் டுடே. கோமாளி என்னும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனரே இந்த படத்தில் ஹீரோவாக நடிச்சுருக்காரே என்று நாம் நினைத்து ரசித்து பார்த்த படம் தான் லவ் டுடே. இந்த படம் இன்றைய காலத்து இளைஞர்கள் எப்படி எல்லாம் காதலிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

love-today-hindi-rights-amir-khan
வெறும் சில கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே படம் பல மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத்தந்தது. இந்த லவ் டுடே படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் பல படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். முக்கியமான ஒரு விஷயம் என்ன வென்றால் இந்த லவ் டுடே படத்தின் ஹீரோ கதாப்பாத்திரத்துக்கு பிரதீப் அருமையாக பொருந்தி இருப்பார். சிறப்பான நடிப்பையும் பிரதீப் வெளிப்படுத்தி இருப்பார்.

love-today-hindi-rights-amir-khan
தற்போது இந்த லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அமீர் கான் வாங்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த ஹீரோ கதாப்பாத்திரத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானும், இவானா நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடிக்க உள்ளனர். இந்த புதுமுக நடிகர்களால் பிரதீப் மற்றும் இவானா அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிஞ்சுக்க முடியும்.
