notification 20
Daily News
விக்ரம் படத்தில் இருக்கும் மிகப்பெரிய சொதப்பல் இதுதான்! பலரின் முன்னிலையில் தனது தவறை ஒப்புக்கொண்ட லோகேஷ்!

lokesh-finally-talk-about-vikram-movie-vfx-effects

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை லோகேஷ் தமிழில் இயக்கிய எந்த படமும் தோல்வி அடையவில்லை. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் படங்களாக இயக்கி வருகிறார் லோகேஷ். தற்போது தளபதி விஜய் நடிப்பில் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகி வரும் லியோ படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

lokesh-finally-talk-about-vikram-movie-vfx-effects

இந்த படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த வருடம் ஆயுதபூஜை அன்று லியோ படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூல் செய்ததால் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

lokesh-finally-talk-about-vikram-movie-vfx-effects

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த லோகேஷிடம் நீங்க விக்ரம் படத்தில் எந்த இடத்தில் சொதப்பியதாக நினைக்குறீங்க என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். நிச்சயம் படம் என்னதான் மெகா ஹிட்டா இருந்தாலும் சில இடங்கள் சரியா வரல. VFX காட்சிகள் சரியா வரல, இன்னும் கொஞ்சம் டைம் கெடச்சுருந்தா VFX காட்சிகள் சிறப்பா எடுத்துருப்பேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Share This Story

Written by

Karthick View All Posts