director-lokesh-statement-about-actor-vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் வேட்டை ஆடியது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் பிரம்மாண்ட பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் தலை முடி பற்றிய ஒரு வதந்தி பல வருடங்களாகவே பரவி வருகிறது.

director-lokesh-statement-about-actor-vijay
அதாவது நடிகர் விஜய்க்கு இருப்பது ஒரிஜினல் முடி இல்லை என்றும், விஜய் எல்லா படங்களிலும் விக் வைத்து தான் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. விஜய் தரப்பில் இந்த விக் முடி பற்றி எந்த வித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

director-lokesh-statement-about-actor-vijay
அதாவது விஜய் லியோ படத்தில் நடிக்க இருக்கும் கதாப்பாத்திரத்திற்கு நிறைய முடி வளர்க்க வேண்டும் என்று லோகேஷ் விஜய்யிடம் சொல்லி இருக்கிறார். விஜய்யும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க கமிட் ஆகியதில் இருந்து அடிக்கடி லோகேஷுக்கு போன் பண்ணி இந்த சைஸ் போதுமா இன்னும் நிறைய முடி வளர்க்கணுமா என்று அனுதினமும் முடி வளர்த்து போட்டோ அனுப்பியுள்ளார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த தகவலை பகிர்ந்துள்ளார் லோகேஷ். இதன் மூலம் விஜய்க்கு இருப்பது விக் முடி அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
