lokesh-complaint-vijay-about-his-fans
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ என்னும் பிரம்மாண்ட பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

lokesh-complaint-vijay-about-his-fans
விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர். இவர் ஒரு ஆடியோ லான்ச் நிகழ்வில் கலந்துகொண்டால் கூட அலை கடலென ரசிகர்கள் திரண்டுவந்து விஜய்யை ரசிப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர்கள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடக்குதுன்னா சும்மா இருப்பாங்களா? தினமும் காலையும், மாலையும் விஜய் மற்றும் லோகேஷ் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் நுழையும்போது போட்டோ எடுக்க கூடி விடுகிறார்களாம்.

lokesh-complaint-vijay-about-his-fans
அதுமட்டுமல்லாமல் சார் ஒரு செல்பி எடுக்கலாமா என்று தொடர்ந்து படக்குழுவினரை தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காங்களாம். இதனால் படம் சம்மந்தமான வீடியோ காட்சிகள் எதுவும் வெளியாகிவிடுமோ என்கிற பயம் லோகேசுக்கு வந்துள்ளது. உடனே தளபதி விஜய்யை சந்தித்து இப்படி போனால் நம்ம இத்தனை நாளா கட்டிக்காத்த சஸ்பென்ஸ் எல்லாம் வெளியே தெரிஞ்சுவிடும்.

lokesh-complaint-vijay-about-his-fans
நம்ம படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வச்சுக்கலாம், அதுதான் நமக்கு நல்லது என்று மைண்ட் வாஷ் செய்துள்ளார் லோகேஷ். விஜய் ரசிகர்களால் விஜய்க்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவால் என்னசெய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கியுள்ளார் விஜய்.
