பெண்களின் திருமண வயது தற்போது 18-21 ஆக நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒரு பெண் 21-வயதில் திருமணம் செய்து கொள்கிறாள் என்று வைத்துக் கொண்டால் அவள் 22-வயதில் தாயாகும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அந்த கால கட்டத்தில் குழந்தை திருமணம் நடை முறையில் இருந்த போது கூட குறைந்தது 10-14 வயது சிறுமிகள் திருமணத்திற்குள்ளாகி மிகவும் சிறிய வயதில் குழந்தை பெற்றுக்கொண்டதாக நிறைய கதைகள் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் 5-வயது சிறுமி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளது வரலாற்றின் மிகப்பெரும் அதிசயம் என்று தான் கூற வேண்டும்.
1933-ம் ஆண்டில் பெரு நாட்டில் பிறந்த லீனா மதீனா தனது 5-ம் வயதில் ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் உலகினரை மிகவும் அ திர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டாலும் உறுதியான தகவலாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மருத்துவ வல்லுனர்களின் கருத்துப்படி அந்த சிறுமி இளம் வயதிலேயே பருவமடைந்திருக்கலாம். இது 10000- ம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் இளம் வயதிலேயே பாலியல் து ன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
மரபணு மாற்றங்கள் லீனா மதீனாவின் பருவமடைதலுக்கு காரணமாக பார்க்கப்பட்டாலும், அவரது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர் பாலியல் து ன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்த வயதில் அது பற்றிய முழுமையான அறிவு அவருக்கு கிடையாது. மற்றும் தனது உடலியல் மாற்றங்கள் குறித்து முழுமையாக தெரிந்திருக்கவும் வாய்ப்புகள் குறைவு. இது குறித்து விசாரித்த போது கூட அது பற்றி தெரியாது என்று லீனா தெரிவித்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். தனது 39-வது வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் லீனா மதீனா. இன்று வரையில் அவரது முதல் குழந்தைக்கு காரணமான நபர் யாரென்று தெரியவில்லை.