notification 20
Daily News
லோகேஷ் பற்றி மனம் திறந்த ராகவா லாரன்ஸ்! மெகா ஹிட் படத்தில் நான் தான் நடிச்சுருக்கணும்? ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு!

lawrance-talk-about-lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் பேய் படங்கள் எடுப்பதில் வல்லவர் ராகவா லாரன்ஸ். ஒரே கதையை தொடர்ந்து நான்கு முறை எடுத்து பேய் காட்சிகளில் மட்டும் வித்யாசம் காட்டி வெற்றி பெற்றவர் ராகவா லாரன்ஸ். அதற்கு உதாரணம் முனி கதையை வச்சே நான்கு காஞ்சனா படங்களை எடுத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

lawrance-talk-about-lokesh-kanagaraj

இந்நிலையில் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி மனம் திறந்துள்ளார் ராகவா லாரன்ஸ். லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி இந்த படத்தில் சந்தானம் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

lawrance-talk-about-lokesh-kanagaraj

முதலில் இந்த சந்தானம் கதாப்பாத்திரத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க தான் லோகேஷ் விரும்பி இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ராகவா லாரன்ஸிடம் கால் சீட் இல்லாததால் விக்ரம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் லாரன்ஸ். அடுத்து மீண்டும் ஒரு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க போகிறேன் என்றும் பேட்டி கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Share This Story

Written by

Karthick View All Posts