திருமணம் முடிந்த கையோடு ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ள நயன்தாரா விரைவில் தனது 75வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படம் குறித்த அறிவிப்பு கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியானது. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய் ஆகியோர் நடிக்கிறாங்க. மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் இப்போதைக்கு இல்ல. தன்னுடைய 75வது படம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் நயன்தாரா என்னென்னமோ செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் செயல்கள் படத்தின் தயாரிப்பாளரை கடுப்பேத்தும் அளவுக்கு இருந்துள்ளது. அதைக்கூட அவர் கண்டுகொள்ளாமல் தான் இருந்துள்ளார். ஆனால் அவுங்க படத்துக்காக கேட்டிருக்கும் சம்பளம் தான் தயாரிப்பாளரை உச்சகட்ட கடுப்பேற்றியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நடித்து வரும் ஜவான் படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் நயன்தாரா. ஆனால் தன்னுடைய 75வது படத்தில் நடிப்பதற்கு 10 கோடி சம்பளம் வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறார்.

ஒரு பாலிவுட் படத்தில் நடித்துவிட்டு 10 கோடி சம்பளம் கேட்பது ரொம்ப ஓவர். படத்தை விளம்பரப்படுத்த நீங்க எதுவுமே செய்ய மாட்டிங்க. எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்க மாட்டிங்க. உங்களுக்கு எதுக்கு 10 கோடி தரணும்? அதிக பட்சம் 5 கோடி தரலாம். அதுக்கு மேல சல்லிக்காசு கூட கொடுக்க முடியாது. இஷ்டமிருந்தால் நடிச்சுக்கொடுங்க. இல்லைனா கிளம்பி போய்கிட்டே இருக்கலாம் என சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். இந்த அறிவிப்பு நயன்தாராவுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

ஆலியா பட், தீபிகா படுகோன், ஊர்வசி ரேஞ்சுக்கு நாமும் சம்பளம் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் நயன்தாரா. ஆனால் தயாரிப்பாளர் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார். நயன்தாராவின் சமீபத்திய படங்களான காத்துவாக்குல ரெண்டு காதல், O2 ஆகியவை ஹிட்டாகவில்லை என்பதால் அவருடைய மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது. அதைப்பற்றி யோசிக்காமல் அவர் சம்பளத்தை உயர்த்திக்கேட்பது சரியில்லை என தயாரிப்பாளர்கள் பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர். இப்படியே போனால் லேடி சூப்பர்ஸ்டார் விரைவில் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார். இதையெல்லாம் சிந்தித்து சூதானமாக நடந்துகொள்ள வேண்டியது அவர் கையில் தான் உள்ளது.