notification 20
Misc
பேருந்தில் பெண்களுக்கு இலவசம் தானே? இருந்தும் ஏன் பேருந்துகளில் இலவச டிக்கெட்டை கண்டக்டர் பெண்களுக்கு கொடுக்கிறார்?

திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தாக மகளிர் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது யாருக்கு சாதகமோ, இல்லையோ வீட்டில் உள்ள ஆண்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களுக்காக எந்த விஷயத்திற்கும் காத்திருப்பதில்லை.

நமக்கு எந்த பஸ்சுல போனாலும் இலவசம் தான் என்று பையை எடுத்துக்கொண்டு பேருந்துகளில் ஏறி வெளியே சென்றுவிடுகிறார்கள். முன்னாடி எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறை பேருந்தில் செல்ல சலித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போ காய், கறி வாங்கக் கூட பஸ் ஏறி சென்றுவிடுகிறார்கள். நகர்ப்புற பேருந்துகளில் செல்லும் அனைத்து பெண்களுக்கும் இலவசம் என்று அரசாங்கம் அறிவித்துவிட்டது.

அப்புறம் எதுக்கு தேவை இல்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்குறாங்க என்று எல்லோரும் யோசிப்பார்கள். எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. அரசாங்கம் பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் இலவசம் என்று அறிவித்த அறிவிப்பின் மூலமாக எத்தனை கோடி பெண்கள் பயனடைந்தார்கள், இதனால் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு ந*ஷ்டம் ஏற்பட்டது போன்ற தகவல்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள், அதனால் எத்தனை பெண்கள் பயனடைகிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த டிக்கெட் கொடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Share This Story

Written by

Karthick View All Posts