notification 20
Lushgreen
இது நம்ம குஷ்புவா? நம்பவே முடியல! திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ரசிகருக்கு குஷ்பூ என்ன பதில் சொல்லியுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எப்பவும் மவுசு குறையாமல் இருப்பவர்கள் நடிகர்கள் தான். எம்.ஜி.ஆர், ரஜினி,கமல், விஜய், அஜித் என்று பல வருடங்களாக நடிகர்கள் நடித்து வந்தாலும் மார்க்கெட் அவங்களுக்கு எப்பவுமே குறையாது. நடிகைகளுக்கு அந்த மாதிரி கிடையாது. சில படங்கள் ஓடவில்லை என்றாலும், கல்யாணம் ஆகிவிட்டாலும், உடம்பு கொஞ்சம் குண்டாகிவிட்டாலும் மார்க்கெட்டில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்.

இந்த நடிகைகள் பட்டியலில் இருந்து ஒரு முன்னணி நடிகை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் வேற யாரும் இல்லேங்க, நம்ம குஷ்பூ மேடம் தான். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இப்பவும் அவருக்கு ரசிகர்கள் குறைந்ததாக தெரியவில்லை. குஷ்பூ சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது அவருக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டிய சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

இப்போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சில நடிகைகள் நடித்து விட்டு மார்க்கெட் இல்லை என்று தெரிந்தவுடன் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நம்ம குஷ்பூ கொஞ்சம் வித்யாசமானவர். சினிமா இல்லைன்னா என்ன, நான் அரசியலில் சாதிப்பேன் என்று அரசியலில் குதித்துவிட்டார்.

அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சினிமா பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்புவும் அதேபோல சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஓணம் வாழ்த்து தெரிவித்தார். அந்த புகைப்படத்தில் பாதி வெயிட் குறைந்த மாதிரி ரொம்ப ஸ்லிம்மாக இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் மேடம் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என்று கமண்ட் செய்திருந்தார். நீங்க ரொம்ப லேட், ஒரு 21 வருசத்துக்கு முன்னாடி நீங்க முயற்சி பண்ணி இருக்கணும், இப்போ இது ரொம்ப லேட், இருந்தாலும் என் வீட்டுக்காரர் கிட்ட கேட்டு சொல்றேன் என்று கமண்ட் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த குஷ்புவின் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share This Story

Written by

Karthick View All Posts