சூப்பர்ஸ்டார் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான அண்ணாத்த திரைப்படம் குறித்து கடந்த ஒரு வார காலமாக கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு தரப்பினர் இது திருப்பாச்சி படத்தைப்போல இருப்பதாக எ திர்மறை விமர்சனங்களை கூறிவந்தாலும் இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அண்ணாத்த திரைப்படத்தை கொண்டாடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
முதலில் ரஜினி மற்றும் நயன்தாரா வயது வித்தியாசம் குறித்து விமர்சித்த நெட்டிசன்கள் பிறகு ரஜினி, கீர்த்தி சுரேஷ் வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டி நெ கட்டிவ் கருத்துக்களை கூறிவந்தனர். இதெல்லாம் போதாது என்று ரஜினியை கலாய்ப்பதற்கு அவர்களுக்கு மேலும் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது. அதாவது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அண்ணாத்த திரைப்படத்தில் அப்பத்தாவாக நடித்த குலப்புள்ளி லீலா ரஜினியை விட மூன்று வயது சிறியவர் என்பது தான் அந்த மேட்டர்.
இன்னும் ஒரு மாதத்தில் சூப்பர்ஸ்டார் தன்னுடைய 71வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால் அவரை விட மூன்று வருடங்கள் சிறியவராக இருக்கும் நடிகை குலப்புள்ளி லீலா ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்திருப்பது சரியா என்று பலரும் இப்போது கேள்விகேட்க ஆரம்பித்து விட்டனர். படத்துக்கு அது பொருந்திவிட்டாலும் நிஜத்தில் வயதை கணக்கிட்டு பார்த்தால் இவர் தான் படத்தில் தங்கையாக நடித்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் நம்மால் மறுக்க முடியவில்லை.
நடிகை குலப்புள்ளி லீலா விஷால் நடித்த மருது படம் மூலம் பிரபலமானவர். தற்போது இவரது உண்மையான வயதை அறிந்துகொண்ட நெட்டிசன்கள் வேறுவிதமாக இயக்குனர் சிவா மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி ஆகியோரை விமர்சித்து வருகின்றனர். சிவாஜி படத்தில் ரஜினிக்கு அப்பா மற்றும் அம்மாவாக நடித்த மணிவண்ணன் மற்றும் வடிவுக்கரசி இருவருமே ரஜினியை விட வயதில் சிறியவர்கள் என்பதைக்கூறி அப்போதே சிலர் கிண்டலடித்தனர். இப்போது அதைப்போலவே அண்ணாத்த படத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறிவிட்டது. பலரும் இதுகுறித்து எ திர்மறை விமர்சனங்கள் வைத்தாலும் எனக்கு இது பெரிதாக தெரியவில்லை. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு தானே, அதில் வயது வித்தியாசம் வருவது இயற்கை தான். இந்த விஷயத்தை பற்றி உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை கமெண்ட் மூலம் எங்களிடம் சொல்லலாம்.