உலகம் முழுவதும் எண்ணற்ற மரங்கள் உள்ளது. புதுசா மரத்தை வளர்க்க முடியவில்லை என்றாலும் இருக்கிற மரத்தையாவது வெட்டி வீழ்த்தாமல் இருக்கலாம். மரங்களை பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருந்த நேரத்தில் தான் எனக்கு நமீபியாவில் இருக்கும் ஒரு மரத்தை பற்றிய தகவல் கிடைத்தது. அந்த மரத்தை பற்றிய சில உன்னதமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
குய்வார் மரம் என்று இந்த மரத்தை அழைக்கலாம். நமீபியாவில் தெற்கு பகுதிகளில் உள்ள காடுகளில் இந்த வகை மரங்கள் நிறையவே செழித்து வளர்கிறது. இந்த மரத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்டதால் நமீபியா அரசாங்கம் குய்வார் காடுகள் உள்ள பகுதியை தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக 1995ம் ஆண்டு அறிவித்தது.
பார்க்க ஒரு சிறிய குடையை போல தோற்றம் கொண்டுள்ள இந்த மரத்தின் தண்டுகள் மிகவும் மென்மையானவையாக இருக்கின்றன. இதனால் இந்த தண்டுகளில் ஒரு ஓட்டை போட்டு இதை ஒரு பாத்திரம் போல இந்த ஊர் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் தண்ணீர், காய்கறிகள் போன்றவற்றை சேமித்து வைக்க முடியுமாம். இதனால் இந்த மரத்தை ஆசிர்வதிக்கப்பட்ட மரமாக உள்ளூர் வாசிகள் கருதுகின்றனர்.
வில் அம்பு பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நீங்க அதை பெரும்பாலும் வீடியோ கேம்ல பாத்திருப்பீங்க. அல்லது ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பாத்திருப்பீங்க. பழைய படங்கள் அல்லது புராணங்களில் ஒரு விஷயத்தை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. வில்வித்தை வீரர் தன்னுடைய அம்புகளை வைப்பதற்கு முதுகில் ஒன்றை மாட்டிக்கொண்டிருப்பாங்க. அதைத்தான் குய்வார் என்று சொல்லுவாங்க. அதை தயாரிப்பதற்கு பெரும்பாலும் இந்த மரத்தைத்தான் பயன்படுத்துவாங்க. இந்த மரம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதென்பது இப்போ புரியுதா நண்பர்களே?