krishna-avatharam-story
கம்சன் தனது தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்னதால் தன்னுடைய தங்கை தேவகியையும், தேவகியின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தார். கழுதைக்கு மோப்ப சக்தி அதிகம். குழந்தை பிறக்கும்போது அதை மோப்பம் பிடித்து கழுதை கத்த ஆரம்பித்துவிடும்.

krishna-avatharam-story
உடனே கம்சன் உள்ளே சென்று குழந்தையை கொன்றுவிடுவார். மனிதர்கள் யாரையாவது காவலுக்கு வைத்தால் அவர்கள் கவனக்குறைவாக இருந்துவிடுவார்கள் என்று கம்சன் குழந்தை பிறக்கும் தருவாயில் கழுதையை காவலுக்கு வைத்தார். ஏழு குழந்தைகள் பிறந்தபோது கழுதை ஒவ்வொரு முறையும் சத்தம் எழுப்பி கம்சன் சிறைக்குள் வந்து குழந்தையை கொன்றுவிட்டு சென்றான்.

krishna-avatharam-story
எட்டாவதாக கிருஷ்ணர் பிறந்தவேளையில் தேவகியின் கணவர் வசுதேவர் அந்த கழுதையின் காலை பிடித்து தயவு செஞ்சு கத்தாதே என்று கெஞ்சினார். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ண அவதாரம் உருவானது. இதை வைத்து தான் காரியம் ஆகணும்னா கழுதையின் காலைப் பிடி என்கிற பழமொழி உருவானது.
