kerala-school-reunion-recent-couple-love-story
பொதுவா காதலுக்கு கண்கள் இல்லைன்னு சொல்லுவாங்க. அதுக்கு காரணம் காதல் எப்பவும் இனம், மொழி, வயது போன்ற எந்த விஷயத்தையும் பார்க்காது. மனசுக்கு பிடிச்சிருக்கா, அப்படியே பண்ணிடலாம் என்று தான் காதல் எப்பவும் முடிவெடுக்கும். கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ரீ யூனியன் என்ற பெயரில் சந்திக்க முடிவெடுத்தனர்.

kerala-school-reunion-recent-couple-love-story
திருவனந்த புரத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆணும், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணும் இந்த ரீ யூனியன் நிகழ்வில் கலந்து கொண்டனர். இவங்க ரெண்டு பேருமே பள்ளியில் படிக்கும்போதே காதலித்துள்ளனர். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் பார்த்த நபர்களை இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

kerala-school-reunion-recent-couple-love-story
இந்த ரீ யூனியன் நிகழ்வில் இந்த ஆணும், பெண்ணும் மீண்டும் சந்திக்கும்போது பழைய காதல் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. ரீ யூனியன் நிகழ்வு முடிந்து சில நாட்கள் ஆகியும் அந்த ஆணும், பெண்ணும் தங்கள் குடும்பத்துக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்போ தான் தெரிஞ்சுருக்கு பழைய காதல் ஜோடிக்குள் மீண்டும் காதல் மலர்ந்து ஓட்டம் பிடித்துவிட்டனர் என்று. என் புருஷனை காணோம் என்று காணாமல் போன ஆணின் மனைவியும், என்னுடைய மனைவியை காணோம் என்று தொலைந்து போன பெண்ணின் புருஷனும் அழுது புலம்பி வருகின்றனர். கேரள போலீசார் இந்த காதல் ஜோடியை தற்போது மும்மரமாக தேடி வருகின்றனர்.
