kerala-lakshmi-priya-love-recent-incident
கேரள மாநிலம் வர்கலா சேர்நியூர் என்னும் பகுதியில் 19 வயது லட்சுமி ப்ரியா என்னும் கல்லூரி மாணவி வாழ்ந்துவருகிறார். இவர் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களில் அந்த வாலிபர் மீது இருந்த மோகம் இந்த பொண்ணுக்கு தீர்ந்தவுடன் தன்னுடைய கல்லூரியை சேர்ந்த இன்னொரு வாலிபரை லட்சுமி பிரியா காதலிக்க தொடங்கியுள்ளார்.

kerala-lakshmi-priya-love-recent-incident
இதை பற்றி அறிந்த அந்த முதல் காதலர் தினமும் இந்த பெண்ணிடம் வந்து என்னை தான் நீ காதலிக்க வேண்டும், என்னுடன் நீ எப்பவும் போல பழைய மாதிரி பழகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஒருகட்டத்தில் முன்னாள் காதலரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் தன்னுடைய இரண்டாவது காதலனுடன் இந்த பெண் சேர்ந்துகொண்டு ஒரு இடத்திற்கு முன்னாள் காதலனை வரவழைத்து கடத்தி சென்றுள்ளனர்.

kerala-lakshmi-priya-love-recent-incident
முன்னாள் காதலனை இரண்டாவது காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து நிர்வாணமாக்கி இரவு முழுவதும் அடைத்து துன்புறுத்தி உடலின் எல்லா பகுதிகளிலும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். தற்போது போலீசார் இந்த லட்சுமி ப்ரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள இரண்டாவது காதலன் மற்றும் கூலிப்படை ஆட்களை போலீசார் தேடி வருகின்றனர்.
