notification 20
Daily News
கேரளாவில் யானையிடம் ஆட்டம் கண்ட பேருந்து! பயணிகள் அதிர்ச்சி!

கேரளா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வனப்பகுதியும், அங்கு இருக்கும் விலங்குகளும் தான். கேரளாவில் உள்ள திருச்சுர் மாவட்டத்தின் வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் அட்டகாசம் நிறைந்திருக்கும். காட்டு யானைகள் மக்கள் செல்லும் வழிப்பாதைகள் வழியாக வந்து பேருந்துகளையும், கார் போன்ற வாகனங்களையும் அச்சுறுத்தும்.

kerala-elephant-attack-bus-incident

குறிப்பாக கபாலி யானைகள் மற்றும் கொம்பன் யானைகள் அதிக அளவில் மக்களை அச்சுறுத்தும். அந்த வழித்தடங்களின் வழியாக செல்லும்போது மக்கள் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே வனத்துறையினர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மலாக்காப்பாறை வனப்பகுதியில் பேருந்து ஒன்று மக்களை ஏற்றி சென்றுள்ளது.

kerala-elephant-attack-bus-incident

அப்போது பேருந்தின் முன்புறம் கபாலி யானை ஒன்று சென்றுள்ளது. கபாலி யானையை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று பேருந்தின் ஓட்டுநர் கபாலி யானையின் பின்புறம் மெதுவாக பேருந்தை இயக்கியுள்ளார். இதை பார்த்த அந்த கபாலி யானை அந்த பேருந்தை நோக்கி ஆக்ரோஷமாக துரத்த ஆரம்பித்தது. என்னசெய்வதென்று தெரியாமல் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக ஒட்டியுள்ளார். கபாலி யானை கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரம் வரை அந்த பேருந்தை துரத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

kerala-elephant-attack-bus-incident
Share This Story

Written by

Karthick View All Posts