நம்ம தமிழ்நாட்டில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டால் மக்களுக்கு அந்த முகம் அடையாளம் தெரிந்துவிட்டால் தனக்கென ஒரு அரசியல் கட்சியை ஆரமித்துக்கொண்டு அந்த நடிகர்கள் அரசியலில் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். வெற்றியோ, தோல்வியோ நானும் நடிகன் தான் என்ற பேரை வைத்துக்கொண்டு அரசியலில் நுழைந்துவிடுகிறார்கள். நம்ம ஊரை போல கேரளாவில் நடிகர்கள் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து வெற்றி பெறுவது ரொம்ப க*டினம்.
இதற்கு முக்கிய காரணம் கேரளா மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே காடுகள் அதிகம். காடுகளுக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்க நினைக்கலாம். காடுகள் உள்ள பகுதிகளில் திரையரங்குகள் இருப்பதில்லை. காடுகளை அழித்து அவர்களால் திரையங்குகள் கட்ட முடியவில்லை. கேரளாவில் மழைக்காலம் அதிகம். மலை அதிகம் பெய்தால் மாலை மற்றும் இரவு வேலை காட்சிகளை நிறுத்திவிடுவார்கள். பகல் நேரத்தில் வேலையை விட்டுவிட்டு படத்திற்கு போகும் மூடர்கள் அங்கு சுத்தமாக இருக்கமாட்டார்கள்.
கேரளாவில் கம்யூனிசம் கட்சிகளின் ஆட்சி ஆரம்பம் முதலே நடைபெறுகிறது. இங்கு வெளியாகும் படங்களும் கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன. படத்தில் நடிகர் 100 பேரை அடிக்க மாட்டார், எதார்த்தத்திற்கு மாறான காட்சிகள் இடம்பெறாது. இதனால் அங்கு உள்ள மக்கள் ஆரம்பம் முதலே தங்கள் நடிகர்களை நடிகனாக மட்டுமே பார்க்கிறார்கள். நம்ம ஊரை போல தலைவனாக பார்க்க மாட்டார்கள். அதனால் தான் அங்கே நடிகர்கள் அரசியலில் இறங்க தயக்கம் காட்டுகிறார்கள். இருந்தும் ஒரு சில நடிகர், நடிகைகள் அரசியலில் இறங்கி எம்.எல்.ஏ, எம்.பி. ஆக உள்ளனர் என்பது கேரளாவின் வரலாறு.