மனிதர்களுக்கு இருக்கும் ஒரு கெ ட்ட பழக்கம் என்னவென்றால் யார் என்ன சொன்னாலும் அதை உண்மை என்று நம்பிவிடுவது. அதுவும் வெள்ளையாக இருப்பவர்களும், உங்களுக்கு பிடித்த நடிகர்களும் இந்த விஷயத்தை பண்ணுங்க என்று சொல்லிவிட்டால் என்ன, ஏது என்று கூட யோசிக்காமல் களத்தில் ரசிகர்கள் இறங்கிவிடுவார்கள். முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்களுக்கு சொல்லவா வேண்டும். எங்கே நமக்கு தீர்வு கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுப் மேனன் என்கிற கேரள நடிகர் தாத்ரி ஹேர் கேர் ஆயில் என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் இந்த கிரீமை தொடர்ந்து 6 வாரங்களுக்கு பயன்படுத்தினால் அமேசான் காடுகளைப் போல உங்கள் தலை முடி வளரும் என்று அந்த விளம்பரத்தில் சொல்லி இருந்தார். இதை உண்மை என்று நம்பி முடி இ ழந்த ஒரு வாலிபர் அந்த கிரீமை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார். அந்த கிரீமின் விலை 376 ரூபாய்.
6 வாரங்கள் கழித்து எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. அவருடைய குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏன்டா ஒரு ஹீரோ சொல்றான்னு இத வாங்கி யூஸ் பண்றியே, உனக்கெல்லாம் அறிவில்லையா என்று அனைவரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ம னம் நொ ந்த அந்த நபர் நீதிமன்றத்தில் வ ழக்கு தொடர்ந்து தனக்கு இ ழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்கு வந்த அந்த நடிகர் சொன்ன விஷயங்கள் எல்லோரையும் அ திர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த நடிகர் எப்போதும் அவங்க அம்மா தயாரித்த எண்ணெய்யை தான் பயன்படுத்துவாராம். இந்த கிரீம் எதற்கு பயன்படுத்துவது என்று கூட அந்த நடிகருக்கு சரியாகச் சொல்ல தெரியவில்லை. வெறும் முடியை பாதுகாக்க மட்டும் தான் இந்த கிரீம் என்று அந்த நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.
பின்னர் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர், அந்த விளம்பர கம்பெனி என அனைவரையும் ந ஷ்டஈடு வழங்கும்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெறும் விளம்பரத்தை மட்டும் பார்த்து நீங்க ஒரு பொருளை வாங்கினால் அதன் தரம் மேலே சொன்ன மாதிரி தான் இருக்கும். உங்களுக்கு பிடித்த நடிகர் இந்த விளம்பரப்படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் நினைத்து இனியாவது எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது உங்களுக்கும் நல்லது, உங்க உ டல் நலத்துக்கும் நல்லது.