பாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் கத்ரீனா கைஃப் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான இந்தியர்களில் ஒருவராக இருந்தாலும் அவர் லண்டனைச் சேர்ந்தவர் என்றும் கூறலாம். ஏனெனில் அவரது தந்தை காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் மற்றும் அவரது தாய் ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஆவார். இதனால் லண்டன் அவருடைய சொந்த ஊர் என்றும் சொல்லலாம். லண்டனின் ஹாம்ப்ஸ்டெட்டில் ரூ 7.02 கோடி மதிப்புள்ள ஒரு வீடு அவருக்கு சொந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
கத்ரீனா கைஃப் மும்பையின் பாண்ட்ராவில் ஒரு வீடு வைத்திருக்கிறார். இது ரூ 8.2 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது. அருகிலுள்ள வட்டாரத்தில் ஒரு பென்ட்ஹவுஸ் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டைம்ஸ் நவ் அறிக்கையின்படி கத்ரீனா கைஃப் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்திருக்கிறார்.
கத்ரீனா கைஃப் 2.37 கோடி ரூபாய் மதிப்புடையதாகக் கூறப்படும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் எல்.டபிள்யூ.பியின் பெருமைக்குரிய உரிமையாளர் ஆவார். இது தவிர கத்ரீனா ஆடி கியூ 7 மற்றும் மெர்சிடிஸ் எம்.எல் 350 ஆகிய சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.
ஃபேஷன் விஷயத்தில் கத்ரீனா கைஃப் ஆடம்பரமான அனைத்தையும் விரும்புகிறார். ரூ 1.4 லட்சம் மதிப்புள்ள ஒரு பாலென்சியாகா பையை (Handbag) அவர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வெல்கம் பாடலில் நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த எமிலியோ புச்சி வெள்ளி உடை ரூ 2.62 லட்சம் மதிப்புடையதாகும்.
படப்பிடிப்பு முடிந்தபின் இந்த உடை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது தவிர பேங் பேங் பாடலில் அவர் அணிந்திருந்த 2 கவுன்கள் ரூ 1.2 கோடி மதிப்புடையது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பல விலைமதிப்புமிக்க ஆடைகளை பரிசாக வாங்கி வைத்திருக்கிறார் கத்ரீனா.